என் மலர்
உள்ளூர் செய்திகள்

தரமான சாலை அமைக்ககோரி பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.
தரமற்ற சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
தரமற்ற சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுரில் முல்லை நகரிலிருந்து 1200 மீட்டரில் ரூ.40லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன் என்பவர் மேற்க் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெருங்களுர் ஊராட்சியில் முல்லை நகரிலிருந்து காட்டுபட்டி வரையிலான சாலை அமைக்கும் பணி அரசு விதித்துள்ளப்படி தரமாக அமைக்கபடாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி தரமான சாலையை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பட்டி, மேட்டுபட்டி, கூத்தாச்சிபட்டி என பல கிராம மக்கள் 5000 மேல் பயன்படுத்தி வரும் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும். பெயரளவில் போடப்படும் சாலையால் எந்த பயனும் இல்லை. விரைவிலேயே சாலை காணாமல் போய்விடும்.
அதிகாரிகளிடம் கூறியும் யாரும் வந்து பார்க்கவில்லை. எனவே தரமான சாலை அமைக்கும் வரை இதுபோன்ற சாலை அமைக்கும் பணியை செய்ய விடமாட்டோம் என அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் தெரிந்து போலிசார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
Next Story






