என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கவிதாராமு நேரில் பார்
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் முடிவடைந்தது. இதைதையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித் ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் பதிவான வாக்குகளில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று எண்ணப்படவுள்ளது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பார்வையாளர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நிகழ்வுகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஒவ்வொரு மேஜையும் கண்காணிக்கப்படவுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றின்முடிவிலும் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 10 மேஜைகள் மூலம் 5 சுற்றுகளாகவும், ஒவ்வொரு பேரூராட்சியும் ஒரு மேஜையின் மூலம், கறம்பக்குடி 16 சுற்றுகளாகவும், இலுப்பூர் மற்றும் கீரமங்கலம் 14 சுற்று களாகவும், மற்றவை 15 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது.
மேலும் அறந்தாங்கி நகராட்சி 5 மேஜைகள் மூலம் 8 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






