என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கிறிஸ்தவ ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    இயேசு சிலைவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தகவக்காலமாக கடைவிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். 

    அதன்படி கடந்த மாதம் 2 ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. இதனையடுத்து ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த 10&ந் தேதி குருத்தோலை பவனி நடந்தது.

    இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஆலங்குடி  புனித அதிசய அன்னை தேவாலயத்தில்  குழந்தைசாமி தலைமையிலும், உதவி பங்குத்தந்தை கித்தேரிமுதது முன்னிலையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). பட்டதாரி பெண்ணான இவர் ஆண்டிராய்டு செல்போன் உபயோகித்து வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தொடர்பான இணைய தளங்களையும் அடிக்கடி தொடர்பு கொண்டு பல்வேறு பதிவுகளையும் அளித்துள்ளார்.

    இந்தநிலையில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கலாம் என அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த சிவரஞ்சனி முதலில் சோதனை அடிப்படையில் ரூ.500 செலுத்தியுள்ளார். அதிலிருந்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.700 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய அவர் தொடர்ந்து வருகிற குறுந்தகவல்களுக்கு பதிலளித்து அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் செலுத்திய நிலையில் தனது வங்கி கணக்கிற்கு வருமானம் வராததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, கவர்ச்சிகரமான அறிவிப்பை கொடுத்து மணமேல்குடி பட்டதாரி பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 900 மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த காளிமுத்து (28), மன்னவன் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை. மாறாக 2 விலை உயர்ந்த செல்போன்கள், 1 கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் யார், யாரிடமெல்லாம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் முக்கிய குற்றவாளியான சோமசுந்தரம் என்பவர் துபாயில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை தமிழகம் வரவைத்து கைது செய்யவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

    எனவே பொதுமக்கள் ஆன்லைனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் நாளை முதல் மீன்பிடித் தடைக்காலம் கடை பிடிக்கப்படுகிறது. இதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று மாலைக்குள் அனைத்து மீனவர்களும், தங்களது படகுகளுடன் கட்டாயமாக கரை திரும்பும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களி லிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை  பெறுகின்றனர்.

    இந்நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல், ஜுன் மாதம் 15-ந் -தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் கடை பிடிக்கப்படுகிறது. இக்காலங்களில் மீனவர்கள் வேலைக்கு செல்லாமல் படகு, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணிகளை செய்து வருகின்றனர். தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ 5 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்-படுகிறது.

    இந்நிலையில் தற்போது உள்ள விலைவாசியில் அரசு வழங்குகின்ற 5 ஆயிரம் போதாது என்றும், அதை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கூறுகையில் மீன்களின் இனப்பெருக்கத்-திற்காக ஆண்டுதோறும் இரண்டு மாத காலங்கள் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இது வரவேற்கதக்கதாக இருந்தாலும், தடைக்காலங்களில் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உள்ளது.

    மேலும் இந்த 60 நாட்களில் மீனவர்கள் நாங்கள் வாழ்வாதாரத்திற்-காக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம் எனவே தற்போது உள்ள விலை வாசிக்கு அரசு வழங்குகின்ற 5 ஆயிரம் போதாது அதனை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    தடைக்காலங்களில் விசைப்படகுகள் இயக்கப்படாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாத காலத்திற்கு எஞ்சின் இயக்கப்படாமல் இருப்பதால் அவைகள் எளிதில் பழுதாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய சுமார் இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை செலவாகிறது. எனவே அரசு மீனவர்களின் நிலையை அறிந்து விசைப்படகிற்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி அருகே த ருவரங்குளம் மணியம்பள்ளம் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ள நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

    இதனால் திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் சொர்ணக்குமார், துணை செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக அலுவலர்கள் உறுதியளித்தனர்.

    இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் வேப்பங்குடி பழ கருப்பையா, பிஜேபி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், தெட்சிணாமூர்த்தி, தி.மு.க. சார்பில் காயாம்பு, திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவ மற்றும்  கருப்பையா ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    3.5 டன் ரேசன் அரிசி யை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை குடிமை பொருட் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையில் போலீசார் திருமயம் தாலுகா, கல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
     
    அங்கு சென்று விசாரிக்கையில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்ததை தெரியவந்தது. இதனையடுத்து லாரியுடன் 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தெக்கூர் செல்வம், லாரி டிரைவர் வேல்பாபுவை கைது செய்தனர். தப்பியோடிய செல்வி மற்றும் சதீஷ்குமாரை தேடிவருகின்றனர்.
    மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கடலில் யாரும் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இதனை மீன் பிடி தடை காலமாக நடைமுறையில் உள்ளது. மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்படும்.

     
    அதன்படி இந்த ஆண்டில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும்.

    இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மேற்கண்ட காலத்தில் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஓட்டல் தொழிலாளி கழுத்தில் கயிற்றை இறுக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னர் அருகில் உள்ள வணிக வளாக வாசலில் கழுத்தில் கயிறு சுற்றியுள்ள நிலையில் வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார். அந்த வழியாக நடை பயிற்சி சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக அவர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்றும், அப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததும், தற்போது ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு இருந்ததால் யாராவது கழுத்தை நெறித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் அவரது இடுப்பு உள்ளிட்ட இடங்களிலும் காயங்கள் தென்பட்டன. எனவே அவரது மரணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     வணிக நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அந்த வாலிபர் இறப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

     இறந்து கிடந்த வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள திரையங்கில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்கள் இரவு நீண்ட நேரம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் விசாரித்தாலும்

    இதுகுறித்து தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையை அடுத்த காவேரி நகரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அன்னவாசல் ஒன்றியம் காவேரி நகர் தபால்நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து-வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கை-களை விளக்கி நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராதிகா உள்ளிட்டோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்-திறனாளிகளுக்கு அரசு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலை மானிய விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடுக்கக்காடு ஏடி காலனியை சேர்ந்தவர் ராமையா (வயது 77). இவர், இதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.

    இவர் தனது  இருசக்கர வாகனத்தில் ராமையாவை ஏற்றிக் கொண்டு வெட்டன்விடுதி கடைத் தெருவிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ராமையா துடிதுடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் ராஜ்குமார் உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார்  ஐடிஐ ல் படித்து, அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,- மாணவியர்-களுக்காக வருகின்ற 21&-ந் தேதி -காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.  

    இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்-கள் கலந்து-கொண்டு தங்களது நிறுவனங்-களுக்கு தேவையான தொழில் பழகுநர்-களை தேர்வு செய்ய உள்ளனர்.  

    இதில் கலந்து-கொள்ள உள்ள மாணவ,-மாணவியர்-கள் தங்களது அசல் கல்விச் சான்றி-தழ்களை கொண்டுவர வேண்டும்.  

    தொழில் பழகுநராக தேர்வு செய்யப்-படும் மாணவ, மாணவியர்-களுக்காக மாதந்-தோறும் உதவித்-தொகை வழங்கப்படும்.  தொழில் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்-துள்ளார்.

     
     
    விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:


    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுவதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

    இதனை தடுக்க வாரம் ஒரு முறை சம்பள ரசீது வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புறத்தில் மட்டுமில்லாமல் நகர்ப்புறத்திலும் பணி வழங்க வேண்டும்.

    இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல குடும்பங்கள் படகில் வரத்தொடங்கி உள்ளனர். அங்கு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடக்க வெகுநாட்கள் இல்லை.5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏறாமல் இருந்தது. 

    ஆனால் தேர்தல் முடிந்த பின் அவற்றின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. 

    இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது என மத்திய அரசு பொய் சொல்கிறது. 

    மருந்து மாத்திரைகள் விலைகளும், சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குவதாக முதல் அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். 

    குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  கந்தர்வகோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கன்னிகா, மகேஸ்வரி, மாரிக்கண்ணு, தேவி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மாவட்டச் செயலாளர் சீதாலட்சுமி, இணைச் செயலாளர் மரியசெல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அனைவரையும் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார்.இறுதியில் மனோகரி நன்றி கூறினார்.
    ×