என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குவதாக முதல் அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கந்தர்வகோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கன்னிகா, மகேஸ்வரி, மாரிக்கண்ணு, தேவி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மாவட்டச் செயலாளர் சீதாலட்சுமி, இணைச் செயலாளர் மரியசெல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அனைவரையும் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார்.இறுதியில் மனோகரி நன்றி கூறினார்.
Next Story






