என் மலர்
புதுக்கோட்டை
பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும்.
மீன்படி திருவிழா கொரோனா பெறுந்-தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை இன்னிலையில் இன்று ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திரு-விழாவில்
பொன்னமராவதி, ஆலவயல்,அம்மன்குறிச்சி, நகரப்பட்டி,மூலங்குடி, கண்டியானத்தம்,அரசமலை, காரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா,வலை,தூரி, கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்-தொடங்கினர்.
அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன இருப்பினும் போதிய மழையில்லாததால் மீன் பெருக்காமல் அரைக்கிலோவுக்கு எடை கொண்டை மீன்கள் மட்டுமே -கிடைத்தன. பொன்னமராவதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 முதல் 3 கிலோ எடை கொண்ட மீன்கள் கிடைத்தது குறிப்பிடதக்கது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதனக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை ஒன்றியம் கல்லுக்காரன் பட்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குடியிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவும்,
கல்லுகாரன்பட்டி பேருந்து நிலையத்தை சீரமைத்தும், சாலை வசதிகள் செய்து தரவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர், ராமையன், இலட்சாதிபதி, அன்பு மணவாளன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வர் திகழ்கிறார் என்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கண்டிச்சாங்- காடு கிராமத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமிய கோட்-பாடுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, இப்தார் நோன்பு திறப்பு, இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்-பதில்லை, குறிப்பாக ஏழையாக இருந்தாலும் முதலில் வருபவர்களுக்கு முதலில் விருந்தளிக்கப்-படுகிறது,
அதே வேளையில் பணக்காரராக இருந்து தாமதமாக வந்தால் அவர்களுக்கு தாமதமாகவே உணவளிக்கப்-படுகிறது. அந்த அளவிற்கு இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இஸ்லாத் காட்டுகிறது.-மேலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்து வரும் - முதல்வர் -இந்தியாவிலேயே இஸ்லாமியர்-களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு அமைச்சர் தெரித்தார்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜடாமுனீவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா காரைக்குடி சாலையில் அமைந்து ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து 14 ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து 2 இரண்டுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடை-பெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவாச்-சாரி சிவக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் -ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் ராஜகோபால்,முனி ரெத்தினம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி சூத்தியன்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில், ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனுறை கல்யாண சுப்பிரமணியர்ஸ் முனீஸ்வரர் துர்க்கையம்மன் மற்றும் நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு ஜீர்ணோ த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
யாக சாலையில் மஹா கணபதி ஹோமம் வைத்து பூஜை செய்யப் பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சும ந்துகொண்டு கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து கற்பக வினயாக மூலஸ்தான விமான கலசம் மற்றும் பரி வார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு பட்டாச்சாரியார் கள் வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களு க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷே கத்திற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொ துமக்கள் திரளானோர் விழாவில் கலந்துகொண்டனர்.ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியை சேர்ந்தவர் இளையராஜா என்கின்ற சின்னதம்பி (வயது 33) கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஆலவயல் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதனை பொன்னமராவதி அருகே மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே காட்டுக்குள் தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வேப்பமரம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் பகுதியை சேர்ந்த இளையராஜா என்கின்ற சின்னதம்பி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பி த ற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு சென்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கல் குவாரியை அகற்றக்கோரி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு தார் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
இதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் அப்பகுதியில் காற்று மாசுபடுவதோடு, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்கு ஒருவித காச நோய் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி பகுதியில் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கந்தர்வக்கோட்டை தொகுதி கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி-புதுக்கோட்டை மற்றும் ராமேசுவரம்&சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மறியல் நடந்த இடத்துக்கு வந்த குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் கலெக்டர் வந்து எழுத்துப்பூர்வமாக தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதியாக கூறியதால் மறியல் தொடர்ந்து நடைபெற்றது.

குருபெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
இண்டாவது குருஸ்தலம் என போற்றப்படும் ஆலங்குடி தர்மஸம்வர்த்னி உடனுறை நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வரும் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நேற்றிரவு நடைபெற்றது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
சொத்து வரி, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி நகர செயலாளர் அப்துல்ரஜாக் தலைமை தாங்கினார்.
மாவட்ட மருத்துவ சேவை அணி தலைவர் ஜமால்முகமது, ஆலங்குடி தொகுதி துணை தலைவர் ராயல்கனி, நகர பொருளாளர் அமீர்தீன், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஜலாஹீதின் கண்டன உரை நிகழ்த்தினார். நகர தலைவர் காரீயம்மைதீன் நன்றி கூறினார். கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 24ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது
நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 24 ந்தேதி அன்று நடைபெறவுள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து உறுதிமொழி எடுத்திடவும், கூட்டப்பொருள்களின் அடிப்படையிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து பயன்பெறும் வகையில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப் பிறப்பையொட்டி நிலத்தில் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்தினர்.
தமிழர் திருநாளான சித்திரை முதல் நாள் நிலத்தில் நல்லேர் பூட்டி விளைநிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கும் என தொன்று தொட்டு விவசாயிகள் நல்லேர் பூட்டுவதை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சித்திரை முதல் நாள் என்பதால் ஆலங்குடி பகுதியில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், மாங்கோட்டை, சேந்தன்குடி, செரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாயிகள் நல்லேர் பூட்டி விளைநிலத்திற்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினர். பல்வேறு கிராமங்களில் ஏர் இல்லாத விவசாயிகள், டிராக்டர்களை கொண்டு உழவு செய்தனர்.
தடைக்காலத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கடற்கரையில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி அதில் உள்ள பழுதுகளை சரி செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள்.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் விசைப்படகு துறைமுகத்தை ஒட்டி எண்ணற்ற சிறு, சிறு வியாபாரிகள் உள்ளனர். தடைகாலம் ஆரம்பித்ததால் அவர்களுக்கு வியாபாரம் குறைய தொடங்கி விடும். முன்னதாக நேற்று கடைசி நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். அப்போது மீன்களை வாங்க வெளியூரிலிருந்து எண்ணற்ற வியாபாரிகள் விசைப்படகு துறைமுகத்தில் குவிந்தனர்.
61 நாட்களுக்கு மீன்கள் கிடைக்காது என்பதால் மீன்களின் விலை இருமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். மீன்பிடி தடைகாலம் விசைப்படகுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல எவ்வித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது