என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்கோட்டை கிராமத்தில் நல்லேறு பூட்டுதல் நடைபெற்றபோது எடுத்தப்படம்
    X
    மாங்கோட்டை கிராமத்தில் நல்லேறு பூட்டுதல் நடைபெற்றபோது எடுத்தப்படம்

    நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு

    புத்தாண்டையொட்டி நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபட்டனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப் பிறப்பையொட்டி நிலத்தில் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்தினர். 

    தமிழர் திருநாளான சித்திரை முதல் நாள் நிலத்தில் நல்லேர் பூட்டி விளைநிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கும் என தொன்று தொட்டு விவசாயிகள் நல்லேர் பூட்டுவதை கடைபிடித்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று சித்திரை முதல் நாள் என்பதால் ஆலங்குடி பகுதியில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், மாங்கோட்டை, சேந்தன்குடி, செரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாயிகள் நல்லேர் பூட்டி விளைநிலத்திற்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினர். பல்வேறு கிராமங்களில் ஏர் இல்லாத விவசாயிகள், டிராக்டர்களை கொண்டு உழவு செய்தனர்.

    Next Story
    ×