என் மலர்
பெரம்பலூர்
பிறந்த சில மணி நேரங்களில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தில் ஓடைப்பாலம் அருகே நேற்று இரவு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த சிசுவை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? தவறான உறவில் பிறந்ததால் வீசி சென்று உள்ளனரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எத்தனை, அந்த குழந்தைகள் தாயின் பராமரிப்பில் உள்ளதா? யாராவது டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார்களா என்று செவிலியர்களின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் 3 கி.மீ. தொலைவில் உள்ள கட லூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தையை இங்கு வந்து யாராவது வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் குளிரும், பனியும் நிலவி வருகிறது. நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவியதோடு, இன்று காலை சூரியன் உதித்தும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
மேலும் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் காலையில் 8.30 மணி வரை தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். சிலர் ஸ்வட்டர், குல்லா அணிந்து குளிரில் நடுங்கியபடி சென்றனர்.
பெரம்பலூர் நகரில் இன்று காலை 8.30 மணி வரை பனிமூட்டம் விலகவில்லை. நகர் முழுவதும் வெள்ளைத்திரை போர்த்தியது போல் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகவும் குறைந்த வேகத்தில் சென்று வந்தன.
பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நகரில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தாக்கத்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள உள்ளியக்குடியை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 70). அதே ஊரைச் சேர்ந்தவர் சிங்காரம்(60). கூலித்தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்த மர வியாபாரியான மருதமுத்து என்பவரது வீட்டில் தங்கி மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு நேற்று முன்தினம் இரவு காசிநாதனும், சிங்காரமும் குடிபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் கீழே விழுந்த காசிநாதனுக்கு தலையின் பின்பகுதியில் அடிபட்டு மூக்கு வழியாக ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காசிநாதனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர் இல்லாததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரஞ்சனா விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து சிங்காரத்தை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பால்வேன் மோதியதில் மாற்றுத்திறனாளி காயம் அடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57). மாற்றுத்திறனாளியான இவர், இன்று காலை பால் வாங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். வேப்பூர் ஒன்றிய அலுவலகம் அருகே வந்த போது, தனியார் பால் வேன் இவர் மீது மோதியது.
இதில் சுப்பிரமணயின் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் கதறினார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூசாரி மர்மமான முறையில் இறந்து சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47). இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்தார். நேற்று மாலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும் பவில்லை.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பதட்டம் அடைந்தனர். நீண்ட நேரம் ஆகியும் நடராஜன் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் விசாரித்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் எசனையிலிருந்து அனுக்கூருக்கு செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வயலில் ஒருவர் இறந்து கிடப்பதாக நடராஜனின் உறவினருக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது, நடராஜன் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது பற்றி பெரம்பலூர் போலீ சாருக்கு தகவல் கொடுத் தனர். போலீசார் இறந்த நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறகு இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, நடராஜனை யாராவது கொலை செய்து வீசி விட்டு சென்றிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்துள்ளாரா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் கோவில் பூசாரி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் அரிய வகையான ‘கொட்டகை' எனும் இனத்தை சேர்ந்த ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டு கொண்டு சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 3 மாதங்களாக இயங்காமல் இருந்த இந்த ஆலையை நேற்று பணியாளர்கள் சீரமைத்து கொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பகுதியில் இருந்து பறவை குஞ்சுகள் நான்கு வித்தியாசமாக கத்தியபடி ஓடி வந்துள்ளன. பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்துடன் பறவை குஞ்சுகள் இருந்ததால் இதுகுறித்து வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பறவை குஞ்சுகளை பார்வையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவை அரிய வகையான ‘கொட்டகை' எனும் இனத்தை சேர்ந்த ஆந்தை குஞ்சுகள். மலைத்தொடர்களில் வாழக்கூடியவை. இனப்பெருக்கத்திற்காக இங்கே வந்த தாய்ப்பறவை குஞ்சு பொரித்திருக்கலாம். தற்போது மீட்கப்பட்டுள்ள குஞ்சுகள் இன்னும் 10 நாட்களில் தனியாக வாழ பழகிவிடும், என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டு, கொண்டு சென்றனர்.

கொடியை எரித்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பரவாய் கிளை அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ளது பரவாய் கிராமம். இந்த கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மழவராயநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் அ.தி.மு.க. கொடி கம்பம் மேடையுடன் கட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கொடி கம்பத்தின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த கட்சியின் கலர் டைல்ஸ்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து குன்னம் போலீசில் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த கொடிக்கம்பத்தின் மேடையில் மர்ம நபர்கள் அமர்ந்து மது குடித்து விட்டு, அதே இடத்தில் பாட்டில்களை போட்டு உடைத்துள்ளனர். மேலும் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. கட்சி கொடியின் கயிற்றை அறுத்து, கொடியை கீழே இறக்கி கொடிக்கம்ப மேடை அருகிலேயே தீ வைத்து எரித்துள்ளனர்.
இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற அ.தி.மு.க.வினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் இதை அறிந்த அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் குவிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து பரவாய் கிளைச் செயலாளர் வேல்முருகன் குன்னம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பரவாய் கிளை அ.தி.மு.க.வினர் கொடியை எரித்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் 1205 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 16.01.2021 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் பிறகு இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவற்களுக்கும் பிறகு 48 வயது மேற்பட்டவர்களுக்கும் தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கும், தடுப்பூசி வழங்குதல் வெவ்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3,92,793 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டு 87.05 சதவீதம், இரண்டாம் தவணையாக 2,83,823 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு 62.9 சதவீதம் சாதனை அடைந்துள்ளோம்.
தற்போது 03.01.2022 முதல் 15 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கோ-வேக்சின் தடுப்பூசி மட்டும் வழங்க அரசு அறிவுறுத்தியதின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 25,258 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கி 97 சதவீதம் சாதனை அடைந்துள்ளோம்.
தற்போது அரசு வழிகாட் டுதலின்படி, கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்க 10.01.2022 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன்படி, மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் 39 வாரங்கள் 9 மாதங்கள் பூர்த்தியானவர்கள் முன்னெச்சரிக்கை தவனை தடுப்பூசி போடடுக்கொள்ள தகுதியானவர்கள்.
20.01.2022 அன்று முன் னெச்சரிக்கை தவணை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்த அரசு அறிவுறுத்தியதன் பேரில், பெரம்ப லூர் மாவட்டத்தில் 31 மையங்களில் தடுப்பூசி வழங் கப்பட்டது. 253 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டது.
இதுநாள்வரை 819 சுகாதாரப்பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடப்பட்டு 52 விழுக்காடும், 260 முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு 34 விழுக்காடும், இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 126 நபர்க ளுக்கு தடுப்பூசி போடப்பட்டு 34 விழுக்காடும், என மொத்தம் 1,205 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது என துணை இயக்குநர் (சுகாதார பணி கள்) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சாலைவிபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
திருச்சி பீமன்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 23). இவரது நண்பர் சூரியா. இவர்கள் இருவரும் குளித்தலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
முசிறி&திருச்சி சாலையில் வெல்லூர் சத்திரம் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சூரியா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த முசிறி போலீசார் சூரியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்த சுரேந்தர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சின்னவெண்மணி காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் இருசக்கர வாகனத்தில் நல்லறிக்கையிலிருந்து புதுவேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் மீது பின்னால் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் மேம்படுத்த மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
தாட்கோ மூலம் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் வாங்குவதற்கும், நிலத்தை மேம்படுத்தவும், வங்கியுடன் இணைந்து, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வருவாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது 18 முதல் 65- வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் அதிக பட்சம் 2.50 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லாதோரிடமிருந்து நிலம் வாங்கப்பட வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானிய தொகையாகவும், மீதி தொகை வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளை கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல், பம்பு செட் அமைப்பதற்காக மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானியமாகவும், மீதத் தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
ஆதிதிராவிட இளைஞர்களுக்கான சிறப்பு சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவம், பல் மருத்துவம் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள், சொந்தமாக மருத்துவ சிகிச்சை, ஆய்வகம், மருந்தகம் அமைப்பதற்கு மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானியமாகவும், மீதத் தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
மேலும், முடநீக்கு வல்லுநர், மருந்தாளுநர், கண்ணாடி வினைஞர் மற்றும் ஆய்வகத் தொழில் தொழில்நுட்ப வல் லுநர் முதலிய மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு சொந்தமாக மருத்துவ சிகிச்சை மையம், கண் கண்ணாடி கடை, ஆய்வகம், மருந்தகம் அமைப்பதற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் உரிய மன்றத்தில் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், விவரங்களை தாட்கோ மாவட்ட மேலாளர், பெரம்பலூர் அலுவலகத்திற்கு சென்ற தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அ.தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமம் உடையார் தெருவை சேர்ந்தவர் முருகேசன், மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சாந்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 40). இவர்களுக்கு 21 வயதில் மகன் உள்ளார். இவர்கள் இப்பகுதியில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று சாந்தா அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மாற்றுத்திறனாளியான எனது கணவர் முருகேசன், கடந்த சில தினங்களாக முன்பு உடல்நிலை சரியில்லாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அறிந்த இதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளர் வினோத், எனது செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி வைத்து, பாலியல் தொல்லை அவ்வப்போது கொடுத்தார்.
நேற்று இரவு எனது கியாஸ் ஏஜென்சியை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, வினோத் எனது வாகனத்தை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இல்லை என்றால் எனது கியாஸ் ஏஜென்சியை எரித்து விடுவதாகவும் மிரட்டினார்.
உடனே நான் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வினோத், அங்கிருந்து ஓடிவிட்டார் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அ.தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலத்தூர் பகுதியில் நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
சின்ன வெங்காயத்திற்கு பெயர்போன பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு, கருணைக்கிழங்கு, மஞ்சள் போன்ற பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு எண்ணெய் வித்துக்களான கடலை, எள் சிறுதானிய பயிர்களான வரகு, கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றுடன் பயறு வகைகளையும் விவசாயிகள் பயிரிட்டு வந்து கணிசமான லாபம் ஈட்டி வந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வறட்சி நிலவியதால் விவசாயிகள் இந்த வகை பயிர்களை கைவிட நேர்ந்தது. அதன் பின்னரே பணப்பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் போன்றவற்றை சாகுபடி செய்ய தொடங்கினர்.
ஆனால் சில சமயங்களில் இயற்கை கைகொடுத்தாலும், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கு மேல் பயிரி டப்பட்டிருந்த சின்ன வெங்காயம் மழைநீரில் மூழ்கியும், நனைந்ததில் பயிர் முளைத்தும் பாதிப்படைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது மழை நின்று வெயில் அடிக்கும் இந்த வேளையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய முயற்சியாக புதியரக காதரி 1812 நிலக்கடலை பயிரிடுவதற்காக விவசாய நிலங்களை சீரமைத்து, உழவு பணிகளை செய்து வந்தனர். 105 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலத்தில் உழுது , அடி உரமிட்டு நிலக்கடலை நடுவதற்காக கரை அமைத்து ஆர்வமுடன் நிலக்கடலை நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.