என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலத்தூர் பகுதியில் நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
  பெரம்பலூர்:

  சின்ன வெங்காயத்திற்கு பெயர்போன  பெரம்பலூர் மாவட்டத்தில்  பருத்தி,  மக்காச்சோளம்,  மரவள்ளிக் கிழங்கு,    கருணைக்கிழங்கு, மஞ்சள்  போன்ற  பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு எண்ணெய் வித்துக்களான கடலை, எள் சிறுதானிய பயிர்களான வரகு, கம்பு, சோளம், கேழ்வரகு     போன்றவற்றுடன் பயறு வகைகளையும் விவசாயிகள் பயிரிட்டு வந்து கணிசமான லாபம் ஈட்டி வந்தனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வறட்சி நிலவியதால் விவசாயிகள் இந்த வகை பயிர்களை கைவிட  நேர்ந்தது.  அதன் பின்னரே பணப்பயிர்களான மக்காச்சோளம்,  பருத்தி, சின்ன  வெங்காயம்  போன்றவற்றை  சாகுபடி  செய்ய தொடங்கினர்.

  ஆனால் சில சமயங்களில் இயற்கை கைகொடுத்தாலும், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும்  சூழல்  ஏற்படுகிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் பெரம்பலூர்  மாவட்டத்தில் 500 ஏக்கருக்கு மேல் பயிரி டப்பட்டிருந்த சின்ன வெங்காயம் மழைநீரில் மூழ்கியும், நனைந்ததில் பயிர் முளைத்தும் பாதிப்படைந்தது. இதனால்  விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

  இந்தநிலையில்   தற்போது மழை நின்று வெயில் அடிக்கும்   இந்த  வேளையில்  பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய முயற்சியாக  புதியரக காதரி 1812 நிலக்கடலை பயிரிடுவதற்காக விவசாய நிலங்களை சீரமைத்து, உழவு பணிகளை செய்து வந்தனர். 105  நாட்களுக்குள்  மகசூல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை  நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  இதன்படி  பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகா பகுதிகளில்  உள்ள  கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலத்தில்  உழுது , அடி  உரமிட்டு நிலக்கடலை  நடுவதற்காக கரை அமைத்து ஆர்வமுடன் நிலக்கடலை  நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×