என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் வருகிற 7-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சி யர் நிறைமதி சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதில் கலெக்டர் ஜல்லிக்கட்டு காளைகள் முதலில் கொண்டு வரும் பகுதிகள், அங்கிருந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்லும் பகுதி, மாடுபிடி வீரர்கள் உள்ள பகுதி, பொதுமக்கள் பார்வையிடும் கேலரி பகுதி, ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுகளை உரிமையாளர்கள் பிடித்துச்செல்லும் பகுதிளை பார்வையிட்டார்.

    ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து  செல்லும் பணிகளை மேற்கொள்ளும் பகுதி, ஜல்லிக்கட்டில் காயமடையும் காளைகளை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கால்நடை மருத்துவர்கள் உள்ள பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.   

    மேலும் அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார்.
    முதலமைச்சரின் முன் மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
    சுகாதாரத்தில் சிறப் பாக செயல்படும் கிராம ஊராட் சிகளை ஊக்குவிக்கும் வகை யில் முன் மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு, 

    மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கி கௌரவிக்கப்படுவதுடன் விருதிற்கான கேடயமும், தலா ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். 
     
    மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி விருது வழங்கி அதற்கான கேடயமும் தலா ரூ.15 லட் சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

    அவ்வாறு விருது பெற தனிநபர் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் முழுமையான பயன்பாட்டில் இருப்பதுடன் கழிப்பறை கட்ட இடம் இல்லாத வீட்டில் வசிக்கும் நபர்கள் ஊராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக இருத்தல் வேண்டும்.  

    கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்பட வேண்டும். அனைத்து வீடுகளில் குப்பைகள் சேகரம் செய்து அவைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும்.
     
    பொதுவாக கிராம ஊராட்சியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன் பொது இடங்களில் மரங்கள் மற்றும் பூச்செடிகள் வைத்து அழகான ஊராட்சியாக இருத்தல் வேண்டும்.

    விருதுக்கு தேர்வு செய்யப் படும் ஊராட்சிகளுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்படும்.  மேற்காணும் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊராட்சி தலைவர்கள் அதற்கான கருத்துருவினை  வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் மாவட்ட அளவிலான பரிந்துரை குழு ஒப்புதல் பெற்று உரிய புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளர்.
    காதலித்த ஆசிரியையை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புது உத்தமன் ஊர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ் (வயது 31). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்

    இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியைச் சேர்ந்த புவனா (வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார். அவர் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இதற்கிடையே புவனா வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் சுரேஷ் வீட்டில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உடனடியாக சுரேசுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

    அதன்படி திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து சுரேசுக்கு வருகிற 7-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. சுரேசின் பெற்றோரும் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த தகவலை அறிந்த ஆசிரியை புவனா கடந்த 31-ந்தேதி திருச்சி சரக ஐ.ஜி.யிடம், தன்னை காதலித்த சுரேஷ் திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக புகார் அளித்தார்.

    இதை அறிந்த சுரேஷ் கடந்த 1-ந்தேதி முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை பெரம்பலூருக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

    தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போன ஏக்கத்தில் சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். பின்னர் அவர் வி‌ஷ மருந்தை சாப்பிட்டு உள்ளார். இதனை அறிந்த சுரேசின் நண்பர் பழனிச்சாமி அவரை மீட்டு நேற்று மாலை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் போலீஸ்காரர் சுரேஷ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த பெண் கிடைக்காத ஏக்கம், வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு, ஐ.ஜி.யிடம் புகார் என மன உளைச்சலில் தவித்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பலூர் நகராட்சியில் போட்டியிட ஒரு இடம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க.வினரிடம், 13வது வார்டை ஒதுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தனர். ஆனால் தி.மு.க.வினர் 13&வது வார்டுக்கு பதில் 21&வது வார்டை ஒதுக்குவதாக காங்கிரசாரிடம் கூறினர்.

    இதே போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதன்படி தி.மு.க.,- காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது.  இதில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாததையடுத்து தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்   பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்:

    குரும்பலூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக 1. கிருஷ்ணமூர்த்தி, 2. சுகுமார், 3. முத்துலெட்சுமி, 4. பத்மினி, 5. நித்யா, 6. செல்வமணி, 7. வேல்முருகன், 8. ஜெயஸ்ரீ, 9. பாரதிசெல்வி, 10. செந்தில்குமார், 11. செல்வராஜ், 12. எழில்அரசி, 13. வளர்மதி, 14. சரளா, 15. குமரேசன்.

    லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வார்டு வாரி யாக 1. சம்சுதீன், 2. அகமது துனிஷா, 3. மும்தாஜ், 4. அல்லாபகஷ், 5. முகமது இலியாஸ், 6. அஸ்மாபானு, 7. மெஹராஜ்கனி, 8. பிரவீன், 9. ஜாபர் அலி, 10. ரெஜியம்மா, 11. மைமூன்சரியா, 12. ஜாபர் அலி, 13. ஜக்ரியா சுஜிதாபேகம், 14. ஆயிஷா. 15 . ஆசாத்குர்ஷ்யா

    அரும்பாவூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக 1. கோகிலா, 2. குமார், 3. செல் லம், 4. சாரதா, 5. மருதாம் பாள், 6. ரமணி, 7. சத் தியா, 8. செந்தில்குமார், 9. ஈஸ்வரி, 10. வீரப்பத்திரன், 11. சரண்யா, 12. கீதா, 13. சிக்கன், 14. பார்த்திபன் , 15. ஜெய்கணேஷ்.

    பூலாம்பாடி பேரூராட்சி யில் வார்டு வாரியாக 1. லோகநாதன், 2. பாண்டியன், 3. மேகலா, 4. கஸ்தூரி, 5. சுதா, 6. அப்துல்சலாம், 7. ஆறுமுகம், 8. செந்தில், 9. சுதாகர், 10. பானுமதி,  11. கவிதா, 12. சுமித்ரா, 13. அகிலாண்டம், 14. சரிதா, 15. வள்ளியம்மை ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     
    இதன்படி வார்டு வாரியாக 1. மலர்கொடி, 3. காயத்ரி, 5. ஜெயபால், 6. தினேஷ்குமார், 7. கலையரசி, 10. சுந்தர், 14. ஹரிஷ்பிரியன், 20. சதீஷ்குமார், 21. செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இதே போல் குரும்பலூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக 5. செல்வமணி, 6. ராமராஜ், 7. கார்த் திக், 8. தனபால், 9. செல் வராஜ், 12. சாந்தி, 14. அவி னேஷ்ராஜா மற்றும் அரும் பாவூர் பேரூராட்சியில் 2. அசோக்குமார், 5. சரண் ராஜ், 10. ரமேஷ், 11. மலர், லெப்பைகுடிக்காடு பேரூ ராட்சியில் 5. பெரியசாமி ஆகி யோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் :

    இதன்படி பெரம்பலூர் நகராட்சியில்  வார்டு வாரியாக வருமாறு:&
     
    1. ஷஹீர் பானு, 2. சுசீலா, 3. ராகவி சந்திரலேகா, 4. பத்மாவதி, 5. சேகர், 6. சித்தார்த்தன், 7. ஷாலினி, 9. ஜெயப்பிரியா, 11. அம்பிகா, 12. சசி இன்பென்டா, 13. நல்லுசாமி, 14. ரஹ்மத்துல்லா, 15. சிவக்குமார், 17. துரைகாமராஜ், 18. சிந்துஜா, 19. சித்ரா, 20. ஹரிபாஸ்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
     
    மீதமுள்ள 8&வது வார்டு விடுதலை சிறுத்தையும், 10 வது வார்டு மதிமுகவிற்கும், 16&வது வார்டு மா.கம்யூ கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 21 வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் காங்கிரஸ் கட்சி அதனை ஏற்கவில்லை. 

    குரும்பலூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக வருமாறு:
    1. செல்வராஜ், 2. ஆனந்தன், 3. நிர்மலா தேவி, 4. சந்திரா, 5. சுமதி, 6. செல்வராணி, 7. செல்வராஜ், 8. வேல்முருகன், 9. கீதா, 10.பிரபு, 11. சங்கீதா, 12. ரேவதி, 13. வளர்மதி, 14. மாதரசி மேரி, 15. சீனிவாசன். குரும்பலூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் திமுகவே போட்டியிடுகிறது.

    லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வார்டுவாரியாக வருமாறு:&
    4. ஜாகீர் உசேன், 5. ஆசிமா பானு, 6. சமீதா பானு, 7. தனலெட்சுமி, 8. ரசூல் அஹம்மது, 10. ரசிதா பேகம், 11. மசூதா பேகம், 13. ஷேக் தாவூத், 14. நஜ்முன்னிசா.  இதில் 1&வது வார்டு ம.தி. மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு 2, 3, 9 வார்டுகளும், மீதமுள்ள 12, 15 வார்டுகளுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரும்பாவூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக 1. சரண்யா, 2. வினோதினி, 3. சாந்தி, 4. செல்வி, 5. கனக வள்ளி, 6. அப்துல்காதர், 7. வள்ளியம்மை, 8. மோகன், 9. புஷ்பலதா, 10. ராமகிருஷ் ணன், 11. வித்யா, 12. மல்லிகா, 14. முருகேசன், 15. ராஜேந்திரன். இதில் 13&வது வார்டு மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பூலாம்பாடி பேரூராட்சியில் வார்டு வாரியாக 1. கலைச்செல்வி, 2. கண்ணகி, 3. ராஜலெட்சுமி, 4. மலர்கொடி, 5. பரக்கத்துன்னிசா, 6. மாணிக்கம், 7. செல்வலெட் சுமி, 8. ராமதாஸ், 9. கிருஷ் ணமூர்த்தி, 11. பூங்கொடி, 12. தேவிகா, 13. மஞ்சுளா, 14. செல்வராணி, 15. பாக்கியலெட்சுமி. இதில் 10&வது வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
     
    சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அன்னமங்கலம்  பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2&ம்வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின்பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, ரமேஷை போசோ சட்டத்தில் கைது செய்து, கோர்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கவுள்பாளையம் கிராமத்தை  சேர்ந்தவர் கருப்பையா மகன் விக்ணேஷ் வயது 23 . கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது இருசக்கரவாகனத்தில் சென்றார். அங்கு அனைவரையும் சந்தித்துவிட்டு, இரவில் கவுள்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

    சறுக்குபாலம் அருகே வந்த போது, நிலைதடுமாறி அருகே உள்ள ஓடையில் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர்,  மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த விக்ணேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 53.66 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தனி சாசில்தாரருமான பழனி செல்வன் தலைமையில் மருவத்தூர் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், கீதா ஆகியோர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

     அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.53 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம், விசாரணை நடத்தியதில், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அயலூரை சேர்ந்த வேலுசாமி (வயது45) என்பதும்,  அவருடன் வந்தவர் மேலப்புலியூரை சேர்ந்த சின்னமணி(32) என்பதும் தெரியவந்தது. அவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கும்பலூரில் உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப ரூ.53 லட்சத்தை வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்து.

    இதே போல் செஞ்சரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.66 ஆயிரத்து 600 இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 53.66 லட்சத்திற்கான பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெரிசிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில ஒப்படைக்கப்பட்டது.
    தேர்தல் தொடர்பான புகார்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  மாவட்ட  கலெக்டர்  ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான   பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும்   வருகிற 19-ந்தேதி  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தல் தொடர்பாக  பொதுமக்கள்  புகார்கள்  மற்றும் குறைகள்  மாவட்ட நிர்வாகத்திற்கு  தெரிவிக்க  மாவட்ட அளவில்  மாவட்ட ஆட்சியரகத்தில்  தேர்தல் பிரிவில்  கட்டுப்பாட்டு அறை  கடந்த 28-ந்தேதி முதல்  செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள்  நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான  குறைகள் மற்றும்  புகார்களை  தெரிவிக்கலாம்.இந்தகட்டுப்பாட்டு அறை 28.1.22 முதல்  வருகிற 18-ந்தேதி வரை 24 மணிநேரமும்  செயல்படும்.

    பொதுமக்களிடம் இருந்து வரப்படும்  புகார்கள்  மற்றும் குறைகள்  உடனடியாக  தொடர்புடைய உள்ளாட்சி  அமைப்பின்  தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பெரம்பலூரில் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.


    குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் மொத்தம் 11,137 வாக்காளர்கள் உள்ளனர். 7 வாக்குச்சாவடி மையங்களில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளது.

    இந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பறக்கும் படைகள் மூலம் அங்கு முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

    மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்களிடம் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்தும்,

    கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    மேலும், வேட்பு மனுக்கள் மற்றும் பெறப்படும் படிவங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் முறையாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மெர்ஸி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் மாமனாரின் சொத்தை முழுவதும் அபகரிக்க வரதட்சணையாக மனைவியின் தங்கையை திருமணம் செய்து தரக்கேட்ட டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்- அமுதா தம்பதியின் மகன் கோபிநாத், டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் கோபிநாத்துக்கு வரதட்சணையாக நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை புதுமண தம்பதியினர் தொடங்கினர். தற்போது ராஜேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதனிடையே கூடுதல் வரதட்சணையாக நகை, பணம், நிலம் ஆகியவற்றை வாங்கி வருமாறு ராஜேஸ்வரியை அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது மாமனார் நாகராஜ், மாமியார் அமுதா ஆகியோர் தினமும் வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும் தகாத வார்த்தையால் திட்டியும், அடித்தும் சித்ரவதை செய்து கொடுமைபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இருந்தபோதிலும் தற்போதைய தனது குடும்ப சூழ்நிலையில் கூடுதல் வரதட்சணை வாங்கி வரமுடியாது என்று ராஜேஸ்வரி திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டார் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். இதனால் தற்போது ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    மீண்டும் ராஜேஸ்வரியுடன் குடும்பம் நடத்துமாறு பெண் வீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டனர். அப்படியானால், ராஜேஸ்வரி வீட்டின் முழு சொத்தையும் அபகரிக்கும் விதமாக மனைவியின் தங்கையையும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோபிநாத் வற்புறுத்தி உள்ளார்.

    அப்போதுதான் நீ என்னுடன் குடும்பம் நடத்த வர முடியும் எனவும், இல்லையென்றால் உங்கள் குடும்பத்தையே அழித்து விடுவேன் என கோபிநாத் மனைவி ராஜேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்ட ராஜேஸ்வரியின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கோபிநாத், மாமனார் நாகராஜ், மாமியார் அகிலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜேஸ்வரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து வரதட்சணை கொடுமை செய்த கோபிநாத்தை கைது செய்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×