என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தேர்தல் தொடர்பான புகார் அளிக்க தொலை பேசி எண் வெளியீடு
தேர்தல் தொடர்பான புகார்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பிரிவில் கட்டுப்பாட்டு அறை கடந்த 28-ந்தேதி முதல் செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.இந்தகட்டுப்பாட்டு அறை 28.1.22 முதல் வருகிற 18-ந்தேதி வரை 24 மணிநேரமும் செயல்படும்.
பொதுமக்களிடம் இருந்து வரப்படும் புகார்கள் மற்றும் குறைகள் உடனடியாக தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story