என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
முன் மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
முதலமைச்சரின் முன் மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சுகாதாரத்தில் சிறப் பாக செயல்படும் கிராம ஊராட் சிகளை ஊக்குவிக்கும் வகை யில் முன் மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு,
மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கி கௌரவிக்கப்படுவதுடன் விருதிற்கான கேடயமும், தலா ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி விருது வழங்கி அதற்கான கேடயமும் தலா ரூ.15 லட் சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
அவ்வாறு விருது பெற தனிநபர் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் முழுமையான பயன்பாட்டில் இருப்பதுடன் கழிப்பறை கட்ட இடம் இல்லாத வீட்டில் வசிக்கும் நபர்கள் ஊராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக இருத்தல் வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்பட வேண்டும். அனைத்து வீடுகளில் குப்பைகள் சேகரம் செய்து அவைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும்.
பொதுவாக கிராம ஊராட்சியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன் பொது இடங்களில் மரங்கள் மற்றும் பூச்செடிகள் வைத்து அழகான ஊராட்சியாக இருத்தல் வேண்டும்.
விருதுக்கு தேர்வு செய்யப் படும் ஊராட்சிகளுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்படும். மேற்காணும் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊராட்சி தலைவர்கள் அதற்கான கருத்துருவினை வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் மாவட்ட அளவிலான பரிந்துரை குழு ஒப்புதல் பெற்று உரிய புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளர்.
Next Story






