என் மலர்
பெரம்பலூர்
லெப்பைக்குடிகாடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
பெரம்பலூர்:
லெப்பைக்குடி காடு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில், 7 இடங்களில் தி.மு.க.வேட்பாளர்களும், 6 இடங்களில் தி.மு.க.கூட்டணி கட்சிகளும், 2 இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது. இதில் 7 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. லெப்பைக்குடிகாடு பேரூராட்சியை கைப்பற்றியது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு - ரபியுதீன் (ம.தி.மு.க.)
2 -வது வார்டு - எகசான்தாஜ் (மனித நேய.)
3 -வது வார்டு - நூர் நிசா (மனித நேய.)
4 -வது வார்டு - ஜாகிர் உசேன் (தி.மு.க.)
5 -வது வார்டு - ஜாபர் உசேன் (சுயேட்சை)
6 -வது வார்டு - சபீதா பானு (தி.மு.க.)
7 -வது வார்டு - தனலெட்சுமி (தி.மு.க.)
8 -வது வார்டு - ரசூல்அகமது (தி.மு.க.)
9 -வது வார்டு - மீரா மெர்தீன் (மனித நேய)
10 -வது வார்டு - ரசிதா பேகம் (திமுக)
11 - வது வார்டு -மசூதாபேகம் (திமுக)
12 -வது வார்டு - மாலிக்பாஷா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
13 -வது வார்டு - சேக்தாவூத் (திமுக)
14 -வது வார்டு - நஜ்முன்னிசா (சுயேட்சை)
15 -வது வார்டு - ஷமீம் பானு (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக அணி மகளிர் அணி வீரர்கள் தேர்வு போட்டி நடை பெற்றது.
பெரம்பலூர்:
இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் நடைபெறவுள்ள 37 வது சப் ஜூனியர் தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக மகளிர் அணி வீரர்கள் தேர்வு போட்டி பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
தமிழ்நாடு கைப்பந்து சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்து தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாநில அளவில் 15 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தேர்வுக்குழு உறுப்பினர்களும், கைப்பந்து பயிற்றுநர்களான வாசுதேவன், அசோக்குமார், ஹரிஹரன், சீதாராமன் ஆகியோர் முன்னின்று தமிழக மகளிர் அணி வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.
போட்டியில் நித்யா, ஜெயஸ்ரீ, ஜெயபாலா, ரேணுகா, புவனேஸ்வரி, ஆராதனா, தமிழ்செல்வி, தீபிகாதர்ஷினி, தர்ஷினி, ரஞ்ஜனி, ஆஷா, சுஜிதா, விசித்ரா, கோபிகா, லீனா, அருந்ததி, பிரியங்கா, அஸ்வினி ஆகியே 18 பேர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் தேர்வு செய்யப்பட்டோர்களுக்கு 3 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, டேக்குவாண்டோ பயிற்றுநர் தர்மராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்வு செய்யப்பட்ட தமிழக மகளிர் கைப்பந்து அணியினர் உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் வரும் 27ம்தேதி முதல் மார்ச் 3ம்தேதி வரை நடைபெறவுள்ள 37 வது சப் ஜூனியர் தேசிய கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.
பெரம்பலூரில் எண்ணெய் வியாபாரி வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் டவுன் பகுதி மேற்கு அபிராமபுரம் பொன்னுசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவர் சமையல் எண்ணெய் டீலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் பரணிதரன், கார்த்தி, சபரி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
இதில் மூத்த மகன் பரணிதரன் சென்னையில் உள்ளார். கார்த்திக் வெளிநாட்டிலும் சபரி பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ரவிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள பரணிதரன் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அவர்கள் நேற்று இரவு மீண்டும் பெரம்பலூர் திரும்பினர். அப்போது சுற்றுச்சுவர் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு இல்லாமல் திறந்து கிடந்ததை பார்த்து ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்த போது பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்திருந்த வைரத்தோடு, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதில் 1 ஜோடி வைரத்தோடு, 2 ஜோடி கல் தோடு, ஒரு டாலர், 2 ஜோடி முத்து தோடு, 6 ஜோடி தோடு, 1 கல் டாலர், 4 மோதிரம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன், பணம் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் மேலும் கொள்ளை சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்மநபர்கள் தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இதில், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2,181 ஆண் வாக்காளர்களும், 3,581 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,764 பேர் என 55.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குரும்பலூர் பேரூராட்சியில் 4,052 ஆண் வாக்காளர்களும், 4,707 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8.759 என 78.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரும்பாவூர் பேரூராட்சியில் 3,946 ஆண் வாக்காளர்களும், 4,697 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8,643 பேர் என 78.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பூலாம்பாடி பேரூராட்சியில் 2,781 ஆண் வாக்காளர்களும், 3,307 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 78.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெரம்பலூர் நகராட்சியில் 13,592 ஆண் வாக்காளர்களும், 15,259 பெண் வாக்காளர் களும் என மொத்தம் 28,851 வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சியில் 66.01 சதவீத வாக்குகளாகும்.
மாவட்டம் முழுவதும், 26,552 ஆண் வாக்காளர்களும், 31,533 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 58,105 பேர் வாக்களித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 69.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்த பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு தி.மு.க. வேட்பாளரை நாய் கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக துரை.காமராஜ் களத்தில் உள்ளார். இன்று காலை அவர் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு தனது வாக்கு செலுத்துவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது வாக்குச்சாவடி முன்பு படுத்திருந்த நாய் திடீரென்று வேட்பாளர் துரை.காமராஜ் மீது பாய்ந்து கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை(வயது 50).
நேற்று அண்ணாதுரை பணியில் இருந்தபோது அதே ஊரை சேர்ந்த சகாய வின்சென்ட்ராஜ்(45) என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவர், தான் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலம் ஆகிறது, ஏன் வரவில்லை என்று கேட்டு அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் சகாய வின்சென்ட்ராஜ் அண்ணாதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அண்ணாதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய வின்சென்ட்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு கவுன்சிலர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதன்படி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் இவர்கள் ஓட்டுபோடு வதற்காக மொத்தம் 111 ஓட் டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
1 நகராட்சி மற்றும் 4 பேரூராட்சியில் 5 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 11 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் என மொத்தம் 16 பேர் நியமிக்கப்பப்பட்டு உள்ளனர். ஒரு ஓட்டுச்சாவடிகளுக்கு 4 அலுவலர்கள் வீதம் சுமார் 540 பேர் ஓட்டுப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஓட்டுச்சாவடிக்கு 200 கட்டுப்பாட்டு கருவிகளும், 400 ஓட்டுப்பதிவு மிஷனும் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினை தடுத்திட அரசு வழி காட்டு நெறிமுறைகள் பின் பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டுச்சாவடி களுக்கு வெப்பமானி, கை சுத்தகரிப்பான், முகக்கவசம், முகமூடி, பிபிஇ கிட்ஸ், டி-கட்-பேக்ஸ், கையுறைகள், பிரவுன் டேப், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் உட்பட 13 பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஓட்டுப்போடுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு பதிவு நாளான இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஓட்டுப்போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
பெரம்பலூரில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை பயிற்சி மையத்தில் பெண்களுக்கான தையல்கலை மற்றும் ஆரி, மகம் வேலைப்பாடு பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 21ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதற்கு வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சிநேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழி காட்டப்படும். நகராட்சி ,பேரூராட்சி சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபால புரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்து பிப்ரவரி 21ம் தேதி நடக்கும் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக அலுவலக நேரத்தில் காலை 10.00 முதல் 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர்தெரிவித்ததாவது
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு தனித்தனி காப்பு அறைகளில் வைக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கு 7 டேபிள்களும், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் தலா இரண்டு டேபிள்கள் அமைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இப்பகுதிகளில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், காப்பு அறைகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பாதைகள், வேட்பாளர் களின் பிரதிநிதிகள் வரும் பாதைகள் என தனித்தனியாக தடுப்பு வழிகள் செய்யப்பட்டுள்ளது.
முழு மையாக அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது. அனைத்துபணிகளும் முடிவுறும் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நுண்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் பார்வையாளர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 11 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டது. வாக்குச் சாவடிகளில் நுண் பார்வையாளராக பணிபுரிய உள்ளவர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
வாக்குச்சாவடியின் உள்ளே உள்ள ஏஜெண்டுகள் அடையாள அட்டைகள் வைத்து உள்ளார்களா என்பதையும், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் மட்டுமே உள்ளே இருக்க வேண்டும் என்பதையும் கண் காணிக்க வேண்டும்.
வாக்குச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் வாக்குப் பதிவு செய்யும் எந்திர பகுதியில் செல்வதையோ, வாக்காளர்களிடம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து ஏதேனும் சொல் கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி பகுதியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் நீங்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து அதனை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் பாரதிதாசன், உதவி ஆணையர் (கலால்) ஷோபா, மாவட்ட நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) மோகன் மற்றும் மத்திய அரசு பணிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே சிறுவர்களை மலம் அள்ள வைத்த 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், சிறுகுடல் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பொது இடத்தில் மலம் கழித்ததாகவும், அதனை கழித்த தலித் இனத்தை சேர்ந்த 2 பள்ளி சிறுவர்களையே அள்ள வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார் மனைவி சித்ரா (36) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் சிலம்பரசன் (25), செல்லமுத்து மகன் செல்வக்குமார் (23), ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி சிறுவர்களை மலம் அள்ள வைத்த சிலம்பரசன் உட்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மாணவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஸ்ரீசந்து (வயது 11) இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5&ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்வத்தன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வயலுக்கு சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தையிடம் ஸ்ரீசந்து வீட்டு சாவியை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
வயலில் வேலையை முடித்து விட்டு இரவு வீட்டுக்குச் சென்ற ஜெய்சங்கர் வீடு உள்பக்கமாக பூட்டியிருப்பதை பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்ரீசந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.