என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் அனுமதி

    ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நுண்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் பார்வையாளர்  ரத்னா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 11 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டது. வாக்குச் சாவடிகளில் நுண் பார்வையாளராக பணிபுரிய உள்ளவர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

    வாக்குச்சாவடியின் உள்ளே உள்ள ஏஜெண்டுகள் அடையாள அட்டைகள் வைத்து உள்ளார்களா என்பதையும், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் மட்டுமே உள்ளே இருக்க வேண்டும் என்பதையும் கண் காணிக்க வேண்டும்.

    வாக்குச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் வாக்குப் பதிவு செய்யும் எந்திர பகுதியில் செல்வதையோ, வாக்காளர்களிடம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து ஏதேனும் சொல் கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி பகுதியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் நீங்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து அதனை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் பாரதிதாசன், உதவி ஆணையர் (கலால்)  ஷோபா, மாவட்ட நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) மோகன் மற்றும் மத்திய அரசு பணிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×