search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    X
    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 110 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர்,  பூலாம்பாடி,  லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு கவுன்சிலர்கள்   வீதம் 60 கவுன்சிலர்கள்  என  மொத்தம் 81 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 

    இதன்படி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் இவர்கள் ஓட்டுபோடு வதற்காக மொத்தம் 111 ஓட் டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    1 நகராட்சி மற்றும் 4 பேரூராட்சியில் 5 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 11 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் என மொத்தம் 16 பேர் நியமிக்கப்பப்பட்டு உள்ளனர். ஒரு ஓட்டுச்சாவடிகளுக்கு  4 அலுவலர்கள் வீதம் சுமார் 540 பேர் ஓட்டுப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

    ஓட்டுச்சாவடிக்கு   200 கட்டுப்பாட்டு  கருவிகளும், 400 ஓட்டுப்பதிவு மிஷனும் அனுப்பப்பட்டுள்ளது.  கொரோனா பெருந்தொற்றினை தடுத்திட அரசு வழி காட்டு நெறிமுறைகள் பின் பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டுச்சாவடி களுக்கு வெப்பமானி, கை சுத்தகரிப்பான், முகக்கவசம், முகமூடி, பிபிஇ கிட்ஸ், டி-கட்-பேக்ஸ், கையுறைகள், பிரவுன் டேப், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் உட்பட 13 பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மாற்றுத் திறனாளிகள் எளிதாக  ஓட்டுப்போடுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு பதிவு நாளான இன்று  காலை  7  மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை    ஓட்டுப்போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து   வாக்குச்சாவடிகளிலும்  காலை முதலே பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
    Next Story
    ×