என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறுவர்களை மலம் அள்ள வைத்த 3 பேருக்கு சிறை

    பெரம்பலூர் அருகே சிறுவர்களை மலம் அள்ள வைத்த 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், சிறுகுடல் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பொது இடத்தில் மலம் கழித்ததாகவும், அதனை கழித்த தலித் இனத்தை சேர்ந்த 2 பள்ளி சிறுவர்களையே அள்ள வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார் மனைவி சித்ரா (36) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் சிலம்பரசன் (25), செல்லமுத்து மகன் செல்வக்குமார் (23), ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி சிறுவர்களை மலம் அள்ள வைத்த சிலம்பரசன் உட்பட 3 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×