என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டி விழா ரோவர் கலைக்கல்லூரியில் நடந்தது. 

    விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து, கலைப் போட்டிகளை தொடங்கி வைத்தார். 

    மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் மீனாம்பாள், எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, தூய்மை இந்தியா திட்டம் குறித்தும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சடனானந்தம் நீர் மேலாண்மை குறித்தும், மனவளக்கலை மன்ற பேராசிரியர் கருப்பையா யோகா கலை குறித்தும் பேசினர். 

    தொடர்ந்து கிராமிய கலைபாடல், பரதநாட்டியம், இசைக்கருவி வாசித்தல், குழு நடனம் போன்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது. 

    போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார், முன்னதாக கல்லூரி முதல்வர் பொறுப்பு மகேந்திரன் வரவேற்றார்.  முடிவில் நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா நன்றி கூறினார்.
    ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது50). ஆட்டோ டிரைவர். இவரது மகளை அதே சிறுவாச்சூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் அருண் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  

    இது சம்பந்தமாக ராஜசேகர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இருதரப் பினைரையும் வரவழைத்து சமரச  பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக அனுப்பி வைத்தனர்.

    சிறுவாச்சூரை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (31) என்பவர் அவரது நண்பர் அருணை போலீஸ்ஸ்டேசனுக்கு அழைத்து சென்று அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கூறி ராஜசேகர் குடும்பத்தினரை கடந்த ஆறு மாத காலமாக மிரட்டி வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ராஜசேகர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேருடன் பெரம்பலூர் போலீஸ்ஸ்டேசனுக்கு வந்து அங்கு தனது குடும்பத்தினரை மிரட்டி வரும் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த முற்பட்டனர்.

    இதனை பார்த்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூர் போலீஸ்ஸ்டேசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண் போலீசாருக்கு புத்துணர்வு முகாம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்ஸ்டேசனில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு புத்துணர்வு முகாம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு எஸ்.பி. மணி தலைமை வகித்து பேசுகையில், போலீஸ்ஸ்டேசனுக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துகூறினார். மேலும் பெண்கள் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்ணான 198-க்கு வரும் அழைப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் எனவும், குறைகளை கூறும் பொது மக்களிடம் நாம் அன்பாகவும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் பெண்கள் உதவி மைய போலீசார், 1098 நிர்வாகி திவ்யா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா, குழந்தை நல வாரிய தலைவர் அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
    உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் பெற்றோர்கள் கோரிக்கை
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அரணாரை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (எஸ்.பி.சி.ஐ.டி) போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர். இவரது மகன் கிருபா சங்கர் (வயது 21) சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த  சிவக்குமாரின் மகன் நவநீதகிருஷ்ணன் (22).

    பெரம்பலூரைச் சேர்ந்த அருண், வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகரைச் சேர்ந்த கண்ணனின் மகன் ரோகித், தீரன்நகரைச் சேர்ந்த ரத்தீஷ், ரோஸ் நகரைச் சேர்ந்த சவுமியா உள்ளிட்ட 10 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவி நகரில் தங்கி அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சார்பில் கிருபா சங்கரின் தந்தை முருகானந்தம், நவநீத கிருஷ்ணனின் அண்ணன் விக்னேஷ் ஆகியோர் கண்ணீர் மல்க பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    இதே போல் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் தெற்கு இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மகன் தருண். குளித்தலை தாலுகா, திம்மாச்சிபுரம், மேலத் தெருவை சேர்ந்த சின்னதுரை&சுதா தம் பதியர்   மகன் சூரியா, மற்றும் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் 6&வது கிராசில் வசித்து வரும் ஆண்டனி கேப்ரியல் &கார்த்திகாயினி தம்பதி மகன் ஸ்ரீநிதி ஆகிய 3 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் மற்றும் ஏரோபேஸ் படித்து வருகின்றனர்.

    இவர்களது பெற்றோர்கள் கரூர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில் :
    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஹீரோவ்பிராட்சி மெட்ரோ ரெயில் நிலையில் உள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள், பொதுமக்கள் தங்கியுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உள்ளிட்ட தமிழக மாணவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

    எனவே மத்திய&மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள எங்கள் மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடக்க வேண்டும் என்றனர்.
    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
    கிராம நிர்வாக அதிகாரி சாவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிராம நிர்வாக அதிகாரி சாவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:
     
    பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர்  ஆரோக்கியசாமி (வயது 50) கிராம நிர்வாக அலுவலரான இவர், அன்னமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார்.
     
    நேற்று முன்தினம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு சேலம் மாவட்டம் வீரகனூர் சென்று பின்னர் நூத்தப்பூரிலுள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இரவு புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு அவர் ஊருக்கு திரும்பவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு ரோடு அருகே சாலையோர பள்ளத்தில் பைக்குடன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அரும்பாவூர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் விரைந்து சென்று ஆரோக்கியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
     
    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றோம். ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலைசெய்து கொண்டாரா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனர்.

    மர்மமான முறையில் இறந்த ஆரோக்கியசாமிக்கு சுவேதா என்கிற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
    போலி தங்க காசு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே தங்கமுலாம் பூசப்பட்ட போலி தங்க காசுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வரதராஜன் (வயது38). கடந்த 16-ந்தேதி பெரம்பலூரில் உள்ள அட்டிகா கோல்டு கம்பெனியின் கிளைக்கு சென்று உதவி மேலாளர் விஜய சாந்தியிடம் 8 கிராம் எடையுள்ள 23 தங்க காசுகளை விற்பனை செய்து, அவரிடமிருந்து ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம் பணம் பெற்றார். 

    23 தங்கக் காசு களையும் பெங்களூரு பிரதான கம்பெனிக்கு அனுப்பி அங்கு பரிசோதித்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலியான காசுகள் என்று தெரியவந்தது. அட்டிகா கோல்டு கம்பெனி மேனேஜர் (பொ) பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் போலி தங்க காசுகளை விற்ற வரதராஜனை பிடித்து 

    அவரிடம் நடத்திய விசாரணையில், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலமுருகன்  (30) என்பவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக கூறினார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து போலி தங்க காசுகளை விற்பனை செய்த வரதராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த பாலமுருகன் ஆகியோர் 2 பேரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.

    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூர் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட  கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மருதடி ஊராட்சியில் மருதடி முதல் நாரணமங்கலம் ரோடு வரை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு குழி அமைத்தல் பணிகளை பார்வையிட்டார். 

    அதனைத் தொடர்ந்து மருதடி கிராமப்பகுதியில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் முத்துலட்சுமி கணபதி என்பவர் வீடு கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன், எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி குமார், மருதடி ஊராட்சி தலைவர்  பத்மாவதி சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் நாரி சக்தி புரஸ்கார் விருது பெறுவதற்கான கருத்துரு வரவேற்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர்  மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உலக மகளிர் தின விழாவின் போது நாரி சக்தி புரஸ்கார் விருது பெறுவதற்கான கருத்துரு வரவேற்கப்படுகிறது.

    நாரி சக்தி புரஸ்கார்  விருது காசோலை ரூ.2,00,000 - மற்றும் சான்றிதழ் வழங்கும் பொருட்டு, பெண்கள் பாலின விகிதத்தை உயர்த்த சேவை புரிந்த தனிநபர், குழுக்கள், தொண்டு நிறுவனம், நிறுவனங்களிடம் கருத்துரு இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

    இவ்விருது பெற தனிநபர் எனில் 25 வயது பூத்தியடைந்தவராக இருக்க வேண்டும், நிறுவனங்கள் எனில் குறைந்தது 5 ஆண்டுகள்  சேவை புரிந்து இருக்க வேண்டும்.  

    மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரியில் 8838872443 மற்றும் 7502034646 என்ற கைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வேப்பூரிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர். 

    தினமும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், அருகில் உள்ள ஆண்டிகுரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் 4சி டவுன் பஸ்சில் தினந்தோறும் படிகட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். 

    இந்நிலையில் அந்த பஸ்சை பெருமத்தூர் குடிக்காடு பிரிவு சாலையில் இருந்து ஊருக்கு உள்ளே வந்து ஆண்டிகுரும்பலூர் வழியாக செல்ல வேண்டும் எனவும், வாலிகண்டபுரம், கீழப்புலியூர், பெருமத்தூர் குடிக்காடு கிராம வழியாக வரும் 4பி டவுன் பஸ் வைத்தியநாதபுரம் வழியாக வேப்பூருக்கு செல்ல வேண்டும் எனவும், 

    வேப்பூர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்ல பெருமத்தூர் குடிக்காடு கிராமம் வழியாக கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    குரும்பலூர் பேரூராட்சியில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    பெரம்பலூர்:

    குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வேட்பாளர்களும், 3 இடங்களில் சுயேட்சைகளும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 11 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. குரும்பலூர் பேரூராட்சியை கைப்பற்றியது.


    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1-வது வார்டு - செல்வராஜ் (தி.மு.க.)
    2-வது வார்டு - ஆனந்தன் (தி.மு.க.)
    3-வது வார்டு - கவிதா (சுயேட்சை)
    4-வது வார்டு - பானுமதி (தி.மு.க.)
    5-வது வார்டு - சுமதி (திமுக)
    6-வது வார்டு - செல்வராணி (திமுக)
    7-வது வார்டு - செல்வராஜ் (திமுக)
    8-வது வார்டு - வேல்முருகன் (திமுக)
    9-வது வார்டு - கீதா (திமுக)
    10-வது வார்டு - பிரபு (திமுக)
    11- வது வார்டு - சங்கீதா (திமுக)
    12-வது வார்டு - எழிலரசி (அதிமுக)
    13-வது வார்டு - வளர்மதி (திமுக)
    14-வது வார்டு - ரம்யா (சுயேட்சை)
    15-வது வார்டு - பெருமாள் (சுயேட்சை)
    அரும்பாவூர் பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
    பெரம்பலூர்:


    அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1-வது வார்டு - கு.சரண்யா (தி.மு.க.)
    2-வது வார்டு - ரெ.தங்கராஜன் (சுயேட்சை)
    3-வது வார்டு - செல்லம் (அதிமுக)
    4-வது வார்டு - செல்வி (திமுக)
    5-வது வார்டு - மருதாம்பாள் (அதிமுக)
    6-வது வார்டு - அப்துல்காதர் (திமுக)
    7-வது வார்டு - வள்ளியம்மை (திமுக)
    8-வது வார்டு -  மோகன் (திமுக)
    9-வது வார்டு - புஷ்பலதா  (திமுக)
    10-வது வார்டு -ராமகிருஷ்ணன் (திமுக)
    11- வது வார்டு -வித்யா (திமுக)
    12-வது வார்டு -கீதா (அதிமுக)
    13-வது வார்டு - சிக்கன் (அதிமுக)
    14-வது வார்டு - பார்திபன் (அதிமுக)
    15-வது வார்டு-ஜெய்கணேஷ் (சுயேட்சை)
    பூலாம்பாடி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி
    பெரம்பலூர்:


    பூலாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில், 12 இடங்களில் தி.மு.க.வேட்பாளர்களும், 2 இடத்தில் அ.தி.மு.க.வும், ஒரு இடத்தில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது. இதில்12 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. பூலாம்பாடி பேரூராட்சியை கைப்பற்றியது.

    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1 வது வார்டு  கலைச்செல்வி (தி.மு.க.)
    2 வது வார்டு  கண்ணகி (தி.மு.க)
    3வது வார்டு  ராஜலடசுமி (தி.மு.க.)
    4 வது வார்டு  கஸ்தூரி  (அதிமுக)
    5 வது வார்டு  பர்க்கத்துன்னிஷா (திமுக)
    6 வது வார்டு   மாணிக்கம் (திமுக)
    7 வது வார்டு  செல்வலட்சுமி (திமுக)
    8 வது வார்டு ராமதாஸ் (திமுக)
    9 வது வார்டு  சுதாகர் (அதிமுக)
    10 வது வார்டு ஜெயந்தி (சுயேட்சை)
    11  வது வார்டு  பூங்கொடி (திமுக)
    12 வது வார்டு  தேவிகா (திமுக)
    13 வது வார்டு  மஞ்சுளா (திமுக)
    14 வது வார்டு செல்வராணி (திமுக)
    15 வது வார்டு  பாக்யலட்சுமி (திமுக)
    ×