என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட அளவிலான கலை போட்டிகள்
பெரம்பலூரில் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டி விழா ரோவர் கலைக்கல்லூரியில் நடந்தது.
விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து, கலைப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் மீனாம்பாள், எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, தூய்மை இந்தியா திட்டம் குறித்தும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சடனானந்தம் நீர் மேலாண்மை குறித்தும், மனவளக்கலை மன்ற பேராசிரியர் கருப்பையா யோகா கலை குறித்தும் பேசினர்.
தொடர்ந்து கிராமிய கலைபாடல், பரதநாட்டியம், இசைக்கருவி வாசித்தல், குழு நடனம் போன்ற கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார், முன்னதாக கல்லூரி முதல்வர் பொறுப்பு மகேந்திரன் வரவேற்றார். முடிவில் நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா நன்றி கூறினார்.
Next Story






