என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன் சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 வார்டு கவுன்சிலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர் கள் கடந்த 2-ந் தேதி கவுன் சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலகமான நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தலைவருக்கான மறைமுகத் தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான மறைமுகத்தேர்தலும் நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் தி.மு.க.வும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்று உள்ளது.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள தி.மு.க., நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 11-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா பெரம்பலூர் நகராட்சி தலைவராகவும், 20 - வது வார்டு கவுன்சிலர் ஹரிபாஸ்கர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
குரும்பலூர் பேரூராட் சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றிப்பெற்றுள்ளது.
இதில் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள தி.மு.க. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 11 வது வார்டு கவுன்சிலர் சங்கீதா குரும்பலூர் பேரூராட்சி தலைவராகவும், 9-வது வார்டு கவுன்சிலர் கீதா துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதே போல் அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக வள்ளியம்மையும், துணை தலைவராக சரண்யாவும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக பாக்கிய லட்சுமியும், துணை தலைவராக செல்வலட்சுமியும், லெப்பைகுடிக்காடு பேரூராட்சி தலைவராக ஜாஹிர் உசேனும் லெப்பைக்குடிகாடு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பிகா, ஹரி பாஸ்கர் ஆகியோருக்கு நகராட்சி ஆணையர் குமரி மன்னன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் நான்கு பேரூராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பெரம்பலூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் பெற நாளை விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நாளை 4&ந்தேதி அன்று காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது.
வங்கி கடன் கோரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப் பிக்கலாம்.
இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப் பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப் பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கி கடன் வழங்க ஆவணச் செய்யப் படும். எனவே மாற்றுத் திறனாளிகள் இச்சிறப்பு வங்கிகடன் மேளாவில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம். இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது
பெரம்பலூர்:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022&23 அரைவை பருவத்தில் எத்தனால் தயாரிப்பு தொழிற்பிரிவை நிறுவன வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24&ந்தேதி சென்னை கோட்டை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கனகராஜ், செல்வராஜ், முருகானந்தம், இளையராஜா, காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 81 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் தி.மு.க.வும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்றது.
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றது.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் தி.மு.க.வும், 6 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது.
பூலாம்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களிலும் தி.மு.க.வும். 2 இடங்களில் அ.தி.மு.க.வும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 7 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக் கட்சியும், 3 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. ஒரு இடத்திலும் 2 இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அம்பிகா, துணை தலைவர் பதவிக்கு ஹரிபாஸ்கரும், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சங்கீதா, துணை தலைவர் பதவிக்கு கீதாவும், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வள்ளியம்மை, துணை தலைவர் பதவிக்கு சரண்யாவும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாக்கியலட்சுமி, துணை தலைவர் பதவிக்கு செல்வலட்சுமியும், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கு ஜாஹிர்உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவ ராத்திரி விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகாசிவ ராத்திரி விழா நடை பெற்றது.
மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடந்த மகா சிவராத்திரி விழாவிற்கு டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசி நாதன், ராதா மாதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6 மணி முதல் மலைமீது சிவஜோதி ஏற்றி நான்கு கால வேள்வி பாராயணம் நடந்தது. விழாவில் நடிகர் தாமு உடல் எனும் திருக்கோயில் எனும் தலைப்பில் பேசினார். வில்லிசை வேந்தர் கிஷோர் குமார் தலைமையிலான வில்லுப் பாட்டு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மஹா பூர்ணாகுதியுடன் சாதுக்களுக்கு வஸ்திர தானமும், மூதாட்டி களுக்கு புடவை தானமும், அன்ன தானமும் நடை பெற்றது.
விழாவில் சினிமா டைரக்டர் சண்முகபிரியன், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட நீதிபதி கருணாநிதி, எஸ்.பி. மணி, சிலை திருட்டுதடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜா ராம், ஊராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப் பிரகாசம், கிருஷ்ணசாமி, ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி மற்றும் மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன்,
மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்கபாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை நடக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.
மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் மகாசிவராத்திரி விழாவைவையொட்டி காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நாளை (1ம்தேதி) மலைமீது சிவஜோதி ஏற்றி நான்குகால வேள்வி பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் 2&ந் தேதி காலை மஹா பூர்ணாகுதியுடன் சாதுக்களுக்கு வஸ்திரதானமும், மூதாட்டிகளுக்கு புடவை தானமும், அன்னதானமும் நடைபெறுகிறது.
விழாவில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட நீதிபதி கருணாநிதி, எஸ்பி மணி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், ஊராட்சி தலைவர் சித்ராதேவி, திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
நடிகர் தாமு உடல் எனும் திருக்கோயில் எனும் தலைப்பில் பேசுகிறார். வில்லிசை வேந்தர் கிஷோர் குமார் தலைமையிலான வில்லுப்பாட்டு குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணிமாதாஜி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா மாதாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமணை இணைந்து “தொடர் மருத்துவ கல்வி” எனும் தலைப்பில் மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவருமான சீனிவாசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் வல்லபன். செயலாளர் சுதாகர், பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நரம்பியல் நிபுணரும், பேராசிரியருமான அலிம், மேம்பட்ட தீவிர பக்கவாத மேலாண்மை குறித்தும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்பாஸ்கர், உயர்தர சிகிச்சையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முறை விரிவாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவம் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலை பழுதில்லாமல் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பெரம்பலூர்:-
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அறவை பகுதி, கரும்பு சாறு பிரித்து எடுக்கும் பகுதி, சர்க்கரை உற்பத்தி மற்றும் உலர்த்தும் பகுதி, இணை உற்பத்தி மின் நிலையம் ஆகிய பகுதிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தற்போது ஆலை நவீனப்படுத்தப்பட்டு விட்டாலும், இதற்காக கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட எந்திரங்கள் அனைத்தும், வெயிலிலும், மழையிலும் 10 ஆண்டுகளாக அப்படியே போட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த எந்திரங்களைதான் தற்போது ஆலையில் பொருத்தியுள்ளனர். இதனால் தான் அடிக்கடி எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எற்படாதவாறு, எந்திரங்கள் அனைத்தும் சரி செய்யப்படும். விவசாயிகள் கவலை அடையத்தேவையில்லை என்றார். மேலும் இனி வரும் காலங்களில் சர்க்கரை ஆலையை பழுதில்லாமல் திறம்பட இயக்க வேண்டும் எனவும் ஆலை நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், துணை தலைமை பொறியாளர் நாராயணசாமி உட்பட ஆலை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் ரொக்க பணத்தை திருடிச்சென்றனர்.
பெரம்பலூர் துறைமங்கலம் பெட்ரோல் பங்க் பின்புறம் அவ்வையார் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பரமேஸ்வரன் (வயது 37).
இவர் கடந்த 25-ந் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
சிகிச்சைக்கு பிறகு தனது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.28 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.30 என கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர்:
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை பெரம்பலூரில் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசு நுகர்வோர் நலத்துறை மூலம் பெரிய வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பருவத்தில், கிலோ ரூ.21&க்கு கொள்முதல் செய்துள்ளதுபோல, சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.30&க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி மார்ச் 7-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,
ஆலை நவீனப்படுத்தப்பட்ட பிறகும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அடிக்கடி எந்திரங்கள் பழுது ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலையை பழுதின்றி இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
திட்டம் தொடங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் கொட்டரை நீர்த்தேக்க திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இத்திட்டத்தை விரைந்து முழுமையடைய செய்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் சிறு தொழில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கி வருவாயை பெற்று பயன் பெறலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்களுக்கு சிறு தொழில் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
நபார்டு வங்கி சிறுதொழில் பயிற்சி வழங்க வெப்சா உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அங்கீகரித்து திட்டம் ஒதுக்கியுள்ளது. இதன்படி சிறுதொழில் பயிற்சி தொடக்க விழாவிற்கு நபார்டு வங்கியின் பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி அலுவலர் நவீன்குமார் தலைமை வகித்து பேசுகையில்,
இத்திட்டத்தின் மூலம் 90 உறுப்பினர்களுக்கு காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, சிறுதானியம் மதிப்புக் கூட்டுதல் மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு பயிற்சி அளித்து, திட்ட அறிக்கை தயாரித்து, வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
எனவே உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் சிறு தொழில் பயிற்சி பெற்று தொழில் தொடங்கி வருவாயை பெற்று பயன் பெறலாம் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில வேளாண் துறையின் அரசு ஆலோசகர் முனைவர் வடி வேல் சிறப்பு ரையாற்றினார். தொடர்ந்து வேளாண் அறிவியல் மைய தலைவர் முனைவர் நேதாஜி மாரியப்பன், சிறு தொழிலின் அவசியம் குறித்தும், மாவட்ட தொழில் பயற்சி மைய இயக்குநர் ஆனந்தி தொழில் துவங்குவது குறித்தும் விளக்கி பேசினர்.
முன்னதாக வெப்சா உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குநர் மணிவாசன் வரவேற்றார். முடிவில் கோதரணி உழவர்கள் உற் பத்தியாளர் நிறுவன இயக்குநர் வேலுச் சாமி நன்றி கூறினார்.