என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 30 அறிவிக்க கோரி கழுத்தில் வெங்காய மாலை அணிந்து விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் காரிப் மற்றும் ராபி பருவ காலங்களில் 75 ஆயிரம் ஏக்கரிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வரும் சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ. 30 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும்.  

    இக் கோரிக்கையை தமிழக அரசு பட்ஜெட்டில் சேர்த்து அறிவித்து விவசாயிகளின் நலன்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் வெங்காய மாலையை அணிந்து கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

    இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட பொருளாளர் மணி உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்தனர்.
    மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நாளை முதல் தொடங்குகிறது.  இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வோருக்கு நடை பெறுகிறது.

    நாளை 10 &ந் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் மார்ச் 11 &ந் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 16 &ந் தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 17 &ந் தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    முகாம்களில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு சிகிச்சை, மனநலன், குழந்தைகள் நலன் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க உள்ளனர்.

    முகாம் நடைபெறும் அன்றே உதவி உபகரணங்கள் பெறுவதற்குத் தேவையான வருமானச் சான்றிதழ் வருவாய் அலுவலர்களால் இணையவழி பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்துக் கொள்ள ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    மாயமான இளம்பெண் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெண், கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

    பெரம்பலூர் - எளம்பலூர் சாலையிலுள்ள ஆர்.எம்.கே நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி அஞ்சலை (வயது 33). இவரை கடந்த 4-ந் தேதி முதல் காணவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காலை வடக்குமாதவி சாலை, சாமியப்பா நகரைச் சேர்ந்த செல்லமுத்து என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் அஞ்சலை உடல் மிதந்துள்ளது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து அஞ்சலையின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குறுவளமைய பயிற்சி நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  அரசு  தொடக்க,  நடுநிலை,  உயர்நிலை  மற்றும்  மேல்நிலை  பள்ளிகளில்  செயல்படும்  பள்ளி  மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி  குறு வளமைய பயிற்சி பெரம்பலூர், எசனை, சிறுவாச்சூர், பொம்மனப்பாடி மற்றும் அம்மாபாளையம் ஆகிய குறுவளமையங்களிலும் தொடங்கியது.

    பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகையில், கட்டாய இலவசக்  கல்வி  உரிமைச் சட்டம்,  பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி வளர்ச்சியில்  சமுதாயத்தின்  பங்கு  உள்ளிட்ட  செயல்பாடுகள் மற்றும்  பள்ளியும், சமுதாயமும் ஒருங்கிணைந்து  செயல்பட்டு  மாணவ, மாணவியர்களின்  கற்றல்  செயல்பாடுகள் முன்னேற உதவ வேண்டும் என தெரிவித்தார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சுப்ரமணியன், ரமேஷ், கலைவாணன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கருத்தாளர்களாக  செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

    இப்பயிற்சியில் இலவசக்கட்டாய கல்வி உரிமைச் சட்டம்- 2009-&ன் நோக்கங்கள், அனைத்து  பள்ளி  வயது  குழந்தைகளும்  பள்ளியில்   சேர்த்து  படிக்க  வைக்க வேண்டும்,  பள்ளி  மாணவ, மாணவியருக்கு  அரசு  அளிக்கும்  நலத்திட்டங்கள்,  

    பள்ளி  வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு பற்றியும்  பள்ளி  மேலாண்மைக்  குழுவின்  செயல்பாடுகள், பெற்றோர்களின்  கடமை,  ஆசிரியர்களின்  கடமை,  பேரிடர்  மேலாண்மைப்  பற்றியும்  விரிவாக  செயல்பாடுகள் ஆகியவை குறித்து கானொலி  காட்சிகள் விளக்கி  கூறப்பட்டது.

    பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத்  தலைவர், துணைத் தலைவர், நகராட்சி கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர், நலிவடைந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் என 385 பேர் கலந்து கொண்டனர். 
    பச்சையம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார் மங்கலம் கிராமத்தில் உள்ள மன்னார் ஈஸ்வரன்- பச்சையம்மன் கோவிலில்  காத்தாயி அம்மன், பூமுனி, வேதமுனி, செம்முனி, ராயமுனி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி காத்தாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இதையடுத்து பச்சையம்மன் கோவிலை சுற்றிலும் காத்தாயி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் நாட்டார் மங்கலம், ஈச்சங்காடு, மருதடி, இரூர், ஆலத்தூர்கேட், செட்டிகுளம், கூத்தனூர், சீதேவிமங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார் மங்கலம் கிராம மக்கள், குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.
    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியார் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 13-வது மாநாடு பெரம்பலூரில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். 

    மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெரியசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு, பொருளாளர் மணிமேகலை ஆகியோர் வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

    மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் துறைவாரியான சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக மணிமேகலை, மாவட்ட செயலாளராக கொளஞ்சிவாசு, பொருளாளராக மருதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். 

    கல்வித்தகுதி உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணி பதவி உயர்வு வழங்க வேண்டும். கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். காலாவதியான பச்சைபயறு, கொண்டைக்கடலை, எண்ணெய் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவேண்டும். 

    தூத்துக்குடியில் இம்மாதம் 12, 13-ந் தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளான பேர் கலந்து கொள்வது. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர் :


    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவுக்கும்(19) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

    இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த சரண்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். இதையறிந்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வெங்காயத்திற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பெரம்பலூர்மாவட்டத்தில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் அதனை பாதுகாக்கவும், போதிய விலை பெறவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். 

    எனவே வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான எந்தவித திட்டமும் அறிவிக்கப்படததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

    விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு செயல்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேலாக வெங்காயம், பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதார விலை கூட கிடைக்காமல் போவதுதான் வேததனைக்குரியது என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கூறுகையில், தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம். ஆனால் கடைசியாக நிலம் கையப்படுத்தப்பட்ட எந்த திட்டத்திலும் பெரம்பலூர் மாவட்டம்  இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.

    சிறப்பு பொருளாதார மண்டலத்தின்கீழ் பெரம்பலூர்  மாவட்டம்  இருந்தும் கருத்தில்   கொள்ளப்படவில்லை.  அதேபோல் அதிக அளவில் பால்  உற்பத்தி செய்தும் பலனின்றி போகிறது. மேலும் பல்லாரி வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இங்கு அதிகம் விளைவிக்கும் சின்ன வெங்காயத்திற்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து, நெல்லுக்கு வழங்குவது போன்று கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும்.

    சோளம், மக்காச்சோளம் எண்ணை, பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.

    பெரம்பலூரில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை திங்கட்கிழமை  முதல் வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  

    இக்கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட புகழ்பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 8-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் மற்றும் 9-ந்தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 

    பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த பந்தல் கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. முகூர்த்தக்கால் நடுவதற்கான பூர்வாங்க பூஜைகளை கோவில் நிர்வாக அலுவலர் அனிதா முன்னிலையில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர்கள்வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சுமதி(வயது 35).

    இந்த தம்பதிக்கு ரூபக் (16) என்ற மகனும், யுவஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். சுமதியின் கணவர் அருணாசலம் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 

    இந்நிலையில் சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் நாளுக்கு நாள் நோயினால் அவதிப்பட்டு வந்த சுமதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் நாளை மறுநாள் (7-ந்தேதி) பொதுஏலம் விடப்பட உள்ளன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் நாளை மறுநாள் (7&ந்தேதி) பொதுஏலம் விடப்பட உள்ளன.

    இது குறித்து மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் தெரிவித்துள்ளதாவது :

    பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள்

    வருகிற 7&ந்தேதி அன்று காலை 10 மணி முதல் தண்ணீர் பந்தலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் எஸ்.பி.மணி முன்னிலையில்  பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்துக்கு  ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏலத்தின் போது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×