என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வெங்காயம் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வெங்காயத்திற்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் பெரம்பலூர்மாவட்டத்தில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் அதனை பாதுகாக்கவும், போதிய விலை பெறவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான எந்தவித திட்டமும் அறிவிக்கப்படததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு செயல்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேலாக வெங்காயம், பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதார விலை கூட கிடைக்காமல் போவதுதான் வேததனைக்குரியது என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கூறுகையில், தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம். ஆனால் கடைசியாக நிலம் கையப்படுத்தப்பட்ட எந்த திட்டத்திலும் பெரம்பலூர் மாவட்டம் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டம் இருந்தும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் அதிக அளவில் பால் உற்பத்தி செய்தும் பலனின்றி போகிறது. மேலும் பல்லாரி வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இங்கு அதிகம் விளைவிக்கும் சின்ன வெங்காயத்திற்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து, நெல்லுக்கு வழங்குவது போன்று கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும்.
சோளம், மக்காச்சோளம் எண்ணை, பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.
Next Story






