என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

    மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நாளை முதல் தொடங்குகிறது.  இது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வோருக்கு நடை பெறுகிறது.

    நாளை 10 &ந் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் மார்ச் 11 &ந் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 16 &ந் தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 17 &ந் தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    முகாம்களில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு சிகிச்சை, மனநலன், குழந்தைகள் நலன் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க உள்ளனர்.

    முகாம் நடைபெறும் அன்றே உதவி உபகரணங்கள் பெறுவதற்குத் தேவையான வருமானச் சான்றிதழ் வருவாய் அலுவலர்களால் இணையவழி பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்துக் கொள்ள ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×