என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசிய போது
    X
    பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசிய போது

    பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூர் காந்தி  சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

    பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப் பிரகாசம், கிருஷ்ணசாமி, ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி மற்றும் மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர்   ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன்,

    மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்கபாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×