என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
கிராம நிர்வாக அதிகாரி மர்ம சாவு
கிராம நிர்வாக அதிகாரி சாவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 50) கிராம நிர்வாக அலுவலரான இவர், அன்னமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு சேலம் மாவட்டம் வீரகனூர் சென்று பின்னர் நூத்தப்பூரிலுள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இரவு புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு அவர் ஊருக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு ரோடு அருகே சாலையோர பள்ளத்தில் பைக்குடன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அரும்பாவூர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் விரைந்து சென்று ஆரோக்கியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றோம். ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலைசெய்து கொண்டாரா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனர்.
மர்மமான முறையில் இறந்த ஆரோக்கியசாமிக்கு சுவேதா என்கிற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

Next Story