என் மலர்
பெரம்பலூர்
புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
புதுநடுவலூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சொறிதல் விழா நடந்தது. இதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி குடி அழைத்தல்,
காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி முதல் தொடர்ந்து தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். கடந்த 1-ந் தேதி மாவிளக்கு பூஜையும், பால்குடம் எடுத்தல் மற்றும் அபிஷேகமும் நடந்தது. 2ம்தேதி அக்னிமிதித்தல், அலகு குத்துதல்,
அக்னிசட்டி ஏந்தல் போன்றவையும், இரவு பொங்கல் வைத்து படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதே போல் எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த 27-ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மள் அருள்பாலித்தார். கடந்த 2-ந் தேதி அக்னிசட்டி ஏந்துதல்,
அலகு குத்துதல் நிகழ்ச்சியும் மற்றும் சிறப்பு பூஜையும் நடந்தது, நேற்று தேரோட்டம் விழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.
வீடியோ காலில் மனைவியிடம் தகவல் கூறிவிட்டு அமரர் ஊர்தி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மனைவி யிடம் வீடிேயா காலில் தகவல் கூறிவிட்டு அமரர் ஊர்த்தி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அசோக் பிரபு (வயது 43) இவர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநராக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி.
இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு கணவரு டன் கோபித்துக் கொண்டு காளீஸ்வரி கோவைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் பெரம்ப லூரில் உள்ள நண்பரின் அறையில் தங்கியிருந்த அசோக் பிரபு சம்பவத்தன்று இரவு செல்போனில் இருந்து வீடியோ காலில் தனது மனைவியை அழைத்து நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளர். இதனால் அதிர்ச்சியடைந்த காளீ ஸ்வரி இதுகுறித்து அசோக்பி ரபுவின் நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அசோக் பிரபு தூக்கிட்ட நிலையில் சடல மாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில்அரசு இசைப்பள்ளியில் திருச்சி கலை பண்பாட்டுமையம், ஜவஹர் சிறுவர் மன்றமும் இணைந்து உலக ஓவிய தினத்தையொட்டி ஓவியப்பயிற்சி முகாம் மற்றும் ஓவிய போட்டியை நடத்தியது.
பயிற்சி முகாமினை திருச்சி மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் சுந்தர் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஓவிய ஆசிரியர்கள் ஹேமா, சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு ஓவியம் வரைதல் குறித்து பயிற்சி அளித்தனர்.
பின்னர் ஓவியபோட்டி நடந்தது. இதில் வயது மற்றும் வகுப்பு அடிப்படையில் 5 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. 175 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.
பின்னர் அனைத்து ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டு அதில் சிறந்த 5 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஓவியங்கள் மாநிலஅளவிலான போட்டியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.

மாணவர்கள் கண்டுபிடித்த தொல்லியல் படிமங்கள் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்:
திருச்சி கல்லூரியின் மண்ணியல் பிரிவு இளநிலை 3-ம் ஆண்டு படிக்கும் 40 மாணவர்கள் மற்றும் 3 பேரசிரியர்கள் ஒருநாள் கள ஆய்வுக்காக பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் பகுதியில் தொல்லியல் படிமங்கள் மற்றும்
புதைவிடங்கள் காணப்படும் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் 125 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் படிமங்களை (தலைக்காலி) கண்டெடுத்தனர். பின்னர், அந்த படிமங்களை கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மணிவண்ணன்(வயது50) சூப்பர்வைசராகவும்,
அம்மாபாளையதைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் தங்கராஜ் (45), துறைமங்கலத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் ராம்குமார்(46) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவீடு விற்பனையாளர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இன்று கடையை திறப்பதற்காக வந்த போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாடலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். விசாரணையில் 10 பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

33 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 33 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அகரம் சீகூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வயலூர் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க கோரியும், ஊரின் நடுவே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கிருத்திகா இளையராஜா, ஊராட்சி செயலர் சுமதி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்தியூர் பாலசுந்தரம், ஒகளுர் அன்பழகன், திருமாந்துறை வேளாங்கண்ணி, கீழப்பெரம்பலூர் சத்யா காமராஜ், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஊராட்சி செயலர் பழனிவேல், வயலப்பாடி உமா பரமசிவம், வேப்பூர் தனம் பெரியசாமி, பெருமத்தூர் சுரேஷ், பென்னகோணம் ஜெயலட்சுமி, சித்தளி ராஜா,
குன்னம் தனலட்சுமி உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டனர்.புதிய முயற்சியாக சில கிராம ஊராட்சிகளில் சென்ற ஆண்டு வரவு-செலவு காண பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர் அருகே மருந்துக்கடையில் நடத்தப்பட்ட கருக்கலைப்பில் செவிலியர் பலியானதையடுத்து தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாசியப்பா கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெற்றிவேல் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
செவிலியராக பணியாற்றிய வேளாங்கண்ணி சு.ஆடுதுறை கிராமத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அத்தியூரில், கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (33) வைத்திருக்கும் மருந்தகத்தில் வேளாங்கண்ணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது.
இதுபற்றி, அவரின் மூத்த மகளுக்கும், தாய் தனலட்சுமி என்ற கேத்ரினுக்கும் (60)தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது இளையராஜா அவர்களிடம், வேளாங்கண்ணி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்ததாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் காப்பாற்றி விடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து வேளாங்கண்ணியை கேத்ரின் மீட்டு, சிகிச்சைக்காக லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கருக்கலைப்பு செய்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேளாங்கண்ணியின் தாய் கேத்ரின், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணிக்கும், இளையராஜாவுக்கும் இடையே இருந்த பழக்கம் குறித்தும், வேளாங்கண்ணி கர்ப்பமாக இருந்தது குறித்தும், மூன்றாவது முறையாக கருவுற்ற வேளாங்கண்ணி யாருடைய கருவை சுமந்தார்?
வேளாங்கண்ணியே மெடிக்கல் வைத்து நடத்தி வந்துள்ளார் செவிலியராகவும் பணியாற்றியவர் அவரே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம், ஏன் அத்தியூர் மெடிக்கலுக்கு சென்று கருக்கலைப்பு செய்தார்?
மேலும் வேளாங்கண்ணி அத்தியூர் மெடிக்கலுக்கு செல்லும் பொழுது சேலை கட்டி சென்று உள்ளதாகவும், மெடிக்கலில் உள்ளாடைகள் இன்றி நைட்டி மட்டும் அணிந்து இருந்ததாகவும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெஞ்சில் கிடந்தது குறித்தும், கருக்கலைப்பு செய்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா அல்லது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதா? அந்த மெடிக்கலில் வேறு யாருக்கெல்லாம் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல மாதங்களாக இளையராஜாவுடன் வேளாங்கண்ணிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது. அத்துடன் தற்போது தலைமறைவாக உள்ள இளையராஜாவை பிடித்து விசாரித்தால் முழுமையான உண்மை தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பெரம்பலூர் அருகே அரசு கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மைய இயக்குநர் முனைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசுக்கல்லூரி முதல்வர் முனைவர் ரேவதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர், புலத்தலைவர் முனைவர் அலிபாவா பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பாரதிதாசனின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, பெரியாரியல், கம்யுனிசம் மற்றும் இலக்கியப்பணி குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பாடல்கள் மாணவர்களுக்குத் திரையிட்டுக்காட்டப்பட்டது.
இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமுருகன் வரவேற்றார்.
முடிவில் கணிதவியல் துறைப்பேராசிரியர் கலைக்கோவன் நன்றி கூறினார்.

பெரம்பலூரில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று பெரம்பலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 30ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், அரசு வழங்கிய அரிசியை தான் நியாய விலைகடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தரமற்ற அரிசியை வழங்கிய அரசின் தவறாகும். அரசு செய்த தவறுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் செயலாளர், விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது.
ஆகையால் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் 9ம்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்படுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் 334 பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள 53 கூட்டுறவு வங்கிகள், 282 ரேசன்கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தது, இந்த வேலை நிறுத்தத்தால் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கு பணி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடைபெறும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

பெரம்பலூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் கால்நடை மருந்த வளாகத்தில் நடந்த முகாமிற்கு மண்டல இணை இயக்குநர் சுரேஷ்கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உதவி இயக்குநர்கள் மும்மூர்த்தி, குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகொண்டு வெறிநோய் தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்து அரசின் புதிய திட்டங்களான தொகுதிக்கு ஒரு ‘நடமாடும் கால்நடை மருத்துவமனை மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஆதரவற்ற விலங்கினங்களுக்கான வள்ளலார் காப்பகம் ஆகிய திட்டங்கள் குறித்து பேசினார்.
கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்கள் ராமன் மற்றும் டாக்டர் ஜவஹர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெளிநோய் தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூருக்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூருக்கு நேற்று வருகை தந்த இந்திய ஜனநாயக வாலிபர்சங்க சைக்கிள் பயண குழுவினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை கொடு பொதுதுறையை தனியாருக்கு விற்க்காதே என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை , புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளிலிருந்து திருச்சியை நோக்கி சைக்கிள் பயணம் கடந்த 21ம்தேதி முதல் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த சைக்கிள் பயண குழுவினர் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் திருமாந்துறை டோல்பூத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெரம்பலூருக்கு வந்த இக்குழுவினருக்கு மக்களுக்கான மருத்துவ கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தலைமையில்
மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடந்தது.

மே தினத்தை முன்னிட்டு நாளை மே1-ந்தேதி அனைத்து மது பான சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள்,
மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மே தினத்தை முன்னிட்டு
நாளை 1.5.22 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.