என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக முது நிலை விரிவாக்க மையம் சார்பில் கவிஞர் பாவே
    X
    குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக முது நிலை விரிவாக்க மையம் சார்பில் கவிஞர் பாவே

    பாரதிதாசன் பிறந்தநாள் விழா

    பெரம்பலூர் அருகே அரசு கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு மைய இயக்குநர் முனைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அரசுக்கல்லூரி முதல்வர் முனைவர் ரேவதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர், புலத்தலைவர் முனைவர் அலிபாவா பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் பாரதிதாசனின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, பெரியாரியல், கம்யுனிசம் மற்றும் இலக்கியப்பணி குறித்து எடுத்துரைத்தார்.

    விழாவில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பாடல்கள் மாணவர்களுக்குத் திரையிட்டுக்காட்டப்பட்டது.

    இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கணிப்பொறியியல் துறை பேராசிரியர் திருமுருகன் வரவேற்றார்.

    முடிவில் கணிதவியல் துறைப்பேராசிரியர் கலைக்கோவன் நன்றி கூறினார்.


    Next Story
    ×