என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தில
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
பெரம்பலூரில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று பெரம்பலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 30ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், அரசு வழங்கிய அரிசியை தான் நியாய விலைகடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தரமற்ற அரிசியை வழங்கிய அரசின் தவறாகும். அரசு செய்த தவறுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் செயலாளர், விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது.
ஆகையால் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் 9ம்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்படுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் 334 பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள 53 கூட்டுறவு வங்கிகள், 282 ரேசன்கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தது, இந்த வேலை நிறுத்தத்தால் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கு பணி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடைபெறும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

Next Story