என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட்டு

    டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    பெரம்பலூர்:


    பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையில் பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மணிவண்ணன்(வயது50) சூப்பர்வைசராகவும்,

    அம்மாபாளையதைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் தங்கராஜ் (45), துறைமங்கலத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் ராம்குமார்(46) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவீடு விற்பனையாளர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

     இந்நிலையில் இன்று கடையை திறப்பதற்காக வந்த போது  ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாடலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். விசாரணையில் 10 பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
    Next Story
    ×