என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம்  

    பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    பெரம்பலூர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் முத்திைரயிடப்படாமல் பயன்படுத்தி வந்த தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் சந்தை, காய்கறி மார்க்கெட், சாலையோர வணிகர்கள் ஆகியோர் பயன்படுத்திய முத்திரையிடாத எடையளவுகள், தராசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பெரம்பலூரில் காய்கறி சந்தை மற்றும் சாலையோர வணிகர்களிடம் உரிய முத்திரையிடாத எடையளவுகள், மின்னணு தராசுகள், எடைகற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி உரிய முத்திரையிடாமல் எடையளவுகள் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தும் வணிகர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே வியபாரிகள் அனைவரும் உரிய காலத்தில் தங்களது எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும் என  தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கல்லூரியின் மாணவியர் விடுதியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே குரும்பலுாரில் உள்ள  மிகவும் பிற்படுத்தபட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குரும்பலூரில் உள்ள  மிகவும் பிற்படுத்தபட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவுசெய்ப்பட்டு  முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும்,

    மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களின் தரம்குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போர்வைகள் உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா எனவும், விடுதியில் குடிநீர், தங்கும்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்றும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் தொல்பொருள் படிமங்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்படவுள்ள பகுதிகளையும், அலுவலகத்தை சுற்றி பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி , குரும்பலுார் பேரூராட்சி செயல் அலுவலர் மெர்ஸி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
    லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் ஷாருக்கான் (வயது25). வாலிகண்டபுரத்தை சேர்ந்த ஷேக்முகமது மகன் அபியுல்லா(40), கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் நாகராஜ் (29). இவர்கள் மூன்று பேரும் பெரம்பலூர் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.


     இவர்கள் லிப்டில் கீழேயிருந்து இரண்டாம் தளத்திற்கு பொருட்களை எடுத்து செல்லும் பொழுது இரண்டாம் தளம் வந்தவுடன் ரோப் அறுந்து லிப்ட் கீழே விழுந்தது.

    இதில் ஷாருக்கான், அபியுல்லா, நாகராஜ் ஆகிய 3பேரும் காயமடைந்தனர். இவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (வயது37). இவர்களுக்கு அபிஷேக்(15), ஜீவிதா (11) என்ற  இரு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வருமாம்.
     
    இதனால் ஆத்திரமடைந்த கவிதா கடந்த 3 மாதங்களாக அவரது பெற்றோர் ஊரான கொப்பம்பட்டிக்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாளையம் வந்துள்ளார்.

    ஊரில் இருந்து வந்த கவிதா  வீட்டிலிருந்த சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த  உறவினர்கள் அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது செல்லும் வழியிலேயே கவிதா இறந்துவிட்டார்.

     இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஆட்சியரக கூட்டரங்கில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடத்துவது தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை வகித்து பேசும் போது,“ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் 10நாள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் குழந்தை களுக்கானபொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகளும், பொதுமக்களுக்கு சேவை வழங்க கூடிய அரசு இ சேவை மையம் அமைத்தல்,

    உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலான மஞ்சள் பைகளையும் மரக்கன்றுகளையும் பொதுமக்களுக்கு வழங்குதல், மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்துதல்,

    அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அலுவலர்கள் குழு அமைத்து துறைவாரியான கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  மேலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து

    பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அது நவீன எல்இடி வாகனம் மூலம் அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வகையிலான வீடியோக்கள் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
     
    எனவே இந்த 10 நாள் கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் பார்த்து தமிழகஅரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள  வேண்டும்  என தெரிவித்தார்.
    கொலை மிரட்டல் விடுத்த மனைவி மீது நடவடிக்கை கோரி போலீஸ் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கோபி(வயது32). இவர் பெரம்பலூர் எஸ்பி மணியிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    எனக்கும் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த பூமாலை மகள் சின்னம்மாள் என்பவருக்கும் கடந்த 2013 ஆண்டு செப்.2ம்தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு சித்தார்த் என்ற மகனும், ரித்லிகா என்ற மகளும் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் சிங்கப்பூர் சென்று வேலை செய்து வந்தேன்.

    நான் வெளிநாட்டில் வேலை செய்ததால் எனது மனைவி பிள்ளைகளுடன் அவரத தாயார் பாப்பாத்தி வீட்டில் சென்று வசித்து வந்தார். என்னுடன் எனது மனைவியின் அண்ணனும், மைத்துனருமான சின்னதுரையும் வேலை செய்து வந்தார். நான் சம்பாதித்த பணத்தை சிறுசிறுக என ரூ. 8 லட்சம் பணத்தை மைத்துனர் சின்னதுரையிடம் கொடுத்து வைத்திருந்தேன். மேலும் எனது மனைவிக்கு 8 பவுனில் தாலி கொடி செய்து போட்டுள்ளேன்.

    கடந்த 2020ம் ஆண்டு நான் சிங்கப்பூரிலிருந்து திரும்பி எனது சொந்த ஊருக்கு வந்து பின்னர் எனது மனைவி வீட்டிற்கு சென்று என்னுடன் குடும்பம் நடத்த வா என அழைத்தபோது உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உன்னுடன் குடும்பம் நடத்த வர முடியாது என சின்னம்மாள் கூறிவிட்டார்.

    இதனால் நான் வேறு வழியில்லாமல் பெரம்பலூர் குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்தேன், குடும்ப நல கோர்ட்டில் எங்களது திருமண உறவை முறித்து விவகாரத்து வழங்கப்பட்டது. அப்போது நான் எனது மனைவிக்கு போட்ட 8 பவுன் தாலிக்கொடி மற்றும் மைத்துனரிடம் கொடுத்த ரூ 8 லட்சம் பணத்தை திருப்பி கொடுப்பதாக சம்மதம் தெரிவித்து கோர்ட்டில் எழுதி சின்னமாள் கொடுத்தார்.

    அதன்படி கடந்த மாதம் 14ம்தேதி எனது உறவினர்களுடன் எனது மனைவி சின்னமாள் வீட்டிற்கு சென்று கோர்ட்டில் எழுதி கொடுத்தப்படி 8 பவுன் தாலிக்கொடி மற்றும் ரூ. 8 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு நகை மற்றும் பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    எனவே கோர்ட்டில் உத்தரவை மீறுவதோடு, கொலை மிரட்டல் விடுத்த எனது மனைவி சின்னம்மாள் மற்றும் மைத்துனர் சின்னதுரை மீது நடவடிக்கை எடுத்து எனது நகை மற்றும் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி மணி அரும்பாவூர் போலீசாருக்கு மனுவினை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பயிர் காப்பீடு பணம் கோரி கலெக்டரிடம் மனு
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே பெருமத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பணத்தை பஞ்சாயத்து செயலாளர் கையாடல் செய்து விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன் மனைவி வசந்தா என்பவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்து இருந்தேன்.

    எனது 2018ம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக 10 ஆயிரத்து 948 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு ஏப்தல் மாதம் 4ம்தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

    மேலும் இது குறித்து விசாரித்த போது பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த 35 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழக அரசின் ஆணைப்படி கடந்த 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கைக்குட்படாத 35 போலீஸ் ஏட்டுகள்,

    சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். அவ்வாறு, பதவி உயர்வு பெற்றவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரியுமாறு அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தனியார்துறை வேலைவாய்பு முகாம் நளை நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும்

     “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறு குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால்  இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு,

    பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற நாளை 6-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.00-மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று தெரிவித:துள்ளார்.
    அரசு தலைமை மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    பெரம்பலூர்:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுணன் தலைமை வகித்தார், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் கலா, டாக்டர்கள் ராஜா, சிவக்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் , அதனை எவ்வாறு அணைப்பது, நோயாளிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் செயல்முறைகளை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
    மாமுல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளரை ரவுடிகள் அடித்து கொன்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் இவரது மகன் நாகராஜன் (வயது 44). மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். 
      
    இந்த நிலையில் லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் எழுத்தாணி (எ) பிரபாகரன் (29), ஆனந்த் மகன் ரகு (எ) ரகுநாத் (23) ஆகிய இருவரும் மெடிக்கல் கடை நடத்தி வரும் நாகராஜை நீண்ட நாட்களாக மிரட்டி பணம் பெற்று வந்ததாக தெரிகிறது.

    நேற்றிரவும் வழக்கம் போல் மாமூல் (பணம்) கேட்டு கடை மூடும் நேரத்தில் நாகராஜை மிரட்டி உள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜன் இது குறித்து மாமுல் கேட்ட இருவரின் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார். 

    இதில் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜனை  ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று சரமாரியாக ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த நாகராஜ், ரத்தம் வழிந்த நிலையில் தட்டுதடுமாறி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அலறிதுடித்து, அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றனர்.

    இங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில்,

    பயந்த சுபாவம் கொண்ட மெடிக்கல் கடைக்காரரிடம் மாமூல் பெற்ற ரவுடிகள் இருவரும், போலீசில் புகார் கொடுத்தால் சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடுவோம் எனவும் ஜாமீன் கிடைக்காது, 

    பின்னர் கடையை திறக்க முடியாது என மிரட்டியதால் புகார் கொடுக்க தயங்கி நிலையில், நாகராஜன் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு, இது குறித்து போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ரவுடிகள் இருவரும் தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளனர் என தெரியவருகிறது. மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளான ரவுகளை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    ×