என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என விதை பரிசோதனை அலுவலர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தில் செயல்பாடுகளை திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், 

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் சித்திரை, வைகாசி பட்டம்  சாகுபடி செய்ய உள்ள மக்காசோளம், சோளம், உளுந்து, கம்பு, பயறுவகை பயிர்கள், எள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் தரமான விதையே நல்விளைச்சலுக்கு அடிப்படை ஆதாரம். தரமான விதைகளை விதைத்தாலே 50 சதவிளைச்சலுக்கு உத்தரவாதம் ஆகும்.

    அவ்வளவு முக்கியமான விதையை தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைத்திடவேண்டும். சாகுபடி செய்யப்படயுள்ள, விதைகுவியலில்லிருந்து விதை மாதிரி விதைகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் விதை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதையின் சுத்ததன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகின்றது.  

    நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன்படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெறமுடியும். மேலும் நேரடி விதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிர்  எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்க முடியும் என்றார்.
    சாலையோர மரக்கன்றுகளை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ .14 லட்சம் செலவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் செங்குணம் பெருமாள் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

    இந்த மரக்கன்றுகளை கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற இரும்பு கூண்டு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் வரை இந்த மரக்கன்றுகள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 25 சதவீத மரக்கன்றுகள் பட்டுப் போய் விட்டன.

    இதுபற்றி அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது, கடந்த மாதம் வரை நடவு செய்த மரக்கன்றுகளை பராமரித்து வந்தனர். கோடைகாலத்தில்  தண்ணீர் விடாத காரணத்தினால் மரக்கன்றுகள் காய்ந்து போய் விட்டன.

    மரக்கன்று நடுவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் நினைக்கிறது. இதனால் அரசின் நிதி தான் வீணாகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவு செய்யும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்தெடுக்க  நிதி ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். மரம் நடுவதை விட அதனை பராமரித்து வளர்ப்பதே முக்கியம் என்றனர்.

    பஞ்சாயத்து நிர்வாக தரப்பில் கூறும்போது, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்ற புதியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மரக்கன்றுகளை பராமரிக்க பணியமர்த்தப்பட உள்ளனர். நடவு செய்த மரங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்

    மின் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின் வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுத்திடவும், மின்விபத்தினை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் அகஸ்டின், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், இயற்கை சீற்றம், 

    பலத்த காற்று போன்ற காரணங்களால் ஏற்படும் மின் தடைகளுக்கு மின் வாரிய ஊழியர்கள் தாக்கப்படுவதும், மின்வாரிய ஊழியர்களை தகாத வார்த்தைகளால் தொலைபேசியில் அசிங்கமாக திட்டுவதும் போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றது.

    குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, வேப்பூர், அரியலூர் மாவட்டத்தில் டி.பழூர் மின் பிரிவுகளில் மின்வாரிய ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். 

    பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ள போதுமான கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை கையாலகூட போதுமான அவகாசம் தராமல் அவசர கதியில் வாய்மொழி உத்தரவு வழங்கப்படுவதால் மின் விபத்து அதிகரித்து வருகின்றது.

    இது போன்ற பிரச்சனையில் உரிய அலுவலர்கள் தாமதமாகவே தலையீடு செய்கின்றனர். இதனால் ஊழியர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    எனவே மின் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    யோகா விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை (14ம்தேதி) நடைபெறவுள்ள விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொள்ள இரு பாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:

    மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம்தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த  ஆண்டும் யோகா தினம் கொண்டாட  முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.


    யோகா தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் நாளை (14ம் தேதி) மற்றும் வரும் ஜூன் 20ம் தேதிகளில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேருயுவகேந்திராவுடன் இணைத்துகொண்டு செயல்பட்டு வரும் 

    இளையோர் மன்றங்களின் மூலம் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தேசிய தன்னார்வ தொண்டர்களை கொண்டு கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளையோர்களிடையே யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 

    யோகா செய்முறை பயிற்சிகள், யோகாவின் கற்றுக்கொள்வதின் பயன்கள், யோகா பற்றிய வினாடி- வினா, கட்டுரை, ஒவியம் போன்ற பல்வேறு விதமான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இருபாலரும் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
    பல்வேறு கோரிக்கை அட்டை அணிந்து கூட்டுறவு துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.
    பெரம்பலூர்:  

    பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், துணைபதிவாளர் அலுவலகம் மற்றுத் துணைபதிவாளர் அலுவலகம் பொதுவிநியோக திட்டம் ஆகிய அலுவலகங்களில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். 

    இதில் விகிதாச்சார விதிகளை தளர்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளராகவும், பதிவறை எழுத்தர், 

    அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை இளநிலை உதவியாளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து, தட்டச்சர் ஆகியோரை இளநிலை ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 

    தேசிய துணை பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும், தேசிய கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும் வரும் 31ம் தேதிக்குள் அங்கீகரித்து பணியிடம் வழங்க வேண்டும். 

    கூட்டுறவு சார்பதிவாளர் நல அலுவலர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் இயக்குனராக நியமனம் செய்ய வலியுறுத்தும் பதிவாளர் சுற்றறிக்கையை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  

    இந்த போராட்டத்தில் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் தலைமையில் 32 பேர் ஈடுபட்டனர்.

    சிறப்பு பட்டா மாற்றம் முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்தில் உள்ள நிலுவை மனுக்கள் தீர்வு செய்திடும் பொருட்டு சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் முகாம் திருமாந்துறை கிராமநிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. 

    முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பால்பாண்டி தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, மண்டல துணை வட்டாட்சியர் பாக்யராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து 22 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், தலைமை சர்வேயர் சந்திரன், சர்வேயர் பிரவீன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து திருமாந்துறை வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தங்களது நில ஆவணங்களில் நில அளவை (புல) எண்கள்,  உட்பிரிவு எண்கள், தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப் பிழை திருத்தம், உறவுநிலை குறித்த திருத்தம், செய்யவும் இந்த முகாம் பயன்பட்டது என்றனர்.

    பெரம்பலூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இருவாரங்களாக தினமும் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தேர்வெழுதும் எஸ்.எஸ்.எல.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 20 நாட்களாக தினமும் 100 டிகிரி செல்சியஸ் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக கடந்த மே 1-ந்தேதி 107, மே 2-ந்தேதி 106 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக பெரம்பலூர் டவுன், பாளையம், அம்மா பாளையம், குரும்பபாளையம், மங்கூன், ஈச்சம்பட்டி, வாலிகண்டபுரம் பகுதிகளில் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

    பாளையம் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 11.55 மின்தடை ஏற்பட்டது. பின்னர் நேற்று காலை 8 மணிக்குதான் மின்சாரம் வந்தது. எனது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி கொண்டிருக்கிறார். இந்த மின்வெட்டு மகளை பெரிதும் பாதித்துள்ளது.

    இப்போது இருக்கும் புழுக்கத்தில் மின்விசிறியோ  ஏசியோ இல்லாமல் இருக்க முடியாது. இதற்கு உடனே தீர்வு காணாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்றார்.
    அம்மாபாளையத்தை சேர்ந்த இன்னொருவர் கூறும்போது, எங்கள் ஊரில் இருவார காலமாக தினசரி 3 மணிநேரம்மின்வெட்டு ஏற்படுகிறது.  பெரும்பாலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால்  மின்வெட்டு வீட்டு உபயோக  பொருட்கள் பாழாகிறது.

    பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் வீட்டிற்கு வெளியே சென்று தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. குறைந்த மின்அழுத்தம் காரணமாக எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்க முடியவில்லை என்றார்.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, கடந்த திங்கட்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த காற்று வீசியது. இதில் மின்கம்பங்கள் சேதடைந்துள்ளன. ஆகவே இதனை சீர்செய்ய மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது. ஆனால் மற்ற நாட்களில் மின்சார வினியோகத்தை நிறுத்தவில்லை என்றனர்.
    சூறைக்காற்றில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன
    பெரம்பலூர்:

    தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 8-ந் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஆந்திரா, 

    ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவியது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது. இதில் ஓரிரு மாவட்டங்களில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. மாநகர் மற்றும் துறையூர், தா.பேட்டை, மணப்பாறை, துவரங்குறிச்சி, துவாக்குடி பகுதிகளில் திடீரென வானில் கருமேகங்கள் சூழந்து காற்று வீசியது.

    அதன்பிறகு அரை மணி நேரத்துக்கு லேசாக மழை தூறி கொண்டே இருந்தது. மழை விட்டாலும் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சூைறக்காற்றுடன் பெய்த மழையால் தொண்டமாந்துறை, குரும்பலூர், மூலக்காடு, விசுவக்குடி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து பாதிப்புக்குள்ளானது. 

    வேளாண்துறையினர் வாழை சேத மதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    பெரம்பலூரில் இலவச வீட்டு உபயோக பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள  இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம்  இலவச  வீட்டு உபயோக பழுது நீக்கல் பயிற்சி  வரும் மே மாதம் 19ம் தேதி முதல் அளிக்கப்பட இருக்கிறது.

    பயிற்சியின் கால அளவு  30 நாட்கள்  பயிற்சி நேரம் காலை  9.30 மணி   முதல் மாலை  5.30  மணி  வரை.  பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

    பயிற்சி முடிந்தவுடன்   அரசால்   அங்கீகரிக்கப்பட்ட   சான்றிதழ்  வழங்கப்படும்.   இப்பயிற்சி  முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

    இப்பயிற்சியில் சேர  19 வயது  முதல்  45  வயதுக்குபட்ட,  எழுத   படிக்க தெரிந்த,  சுய   தொழில்   தொடங்குவதில்   ஆர்வம்   உள்ளவராக இருத்தல் வேண்டும்  மேலும் வறுமை கோட்டு எண், குடும்ப அட்டை எண் உள்ள  கிராப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தியிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

    குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் 

    ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மே மாதம் 13ம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய  சுய  வேலை  வாய்ப்பு பயிற்சி  மையம்,  ஷெரீஃப்  காம்ப்ளக்ஸ்,  பெரம்பலூர்  – 621212  என்ற முகவரியிலோ  அல்லது   04328-277896,    என்ற எண்ணிலோ  91 94888 40328 தொலைப்பேசி மூலமாக  தொடர்பு கொள்ளலாம்.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவர்களுக்கு தலைமை பண்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைச் சார்பாக ராணுவ வழியில் தலைமைப் பண்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக லடாக்கில் பணியாற்றும் இந்திய ராணுவத்தில் தளபதி ஸ்ரீகணேஷ் ராமன் கலந்துகொண்டு பேசியதாவது: 

    மாணவ சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்று ஒழுக்கமாகும். இது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். ஒழுக்கமாக இருப்பதினால் எந்த செயலை வேண்டுமானாலும் மிகவும் நேர்மையுடனும், துணிவுடனும் செய்திட முடியும். அது மட்டுமில்லாமல் மிகவும் பொறுப்புணர்வடன் அதை செய்து முடிக்க முடியும். 

    உங்கள் வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும் அதை திறம்பட கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய உங்களுக்கு எது மிக முக்கியம் என்றால் நேர மேலாண்மை, கற்பித்தல், விளையாட்டு, குடும்பம் என சரியாக நேரம் ஒதுக்கி பயன்படுத்த வேண்டும். 

    மாணவ பருவத்திலேயே மனித மாண்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கடைபிடித்து ஒரு சிறந்த மாணவனாக மட்டுமின்றி நல்ல குடிமகனாகவும் திகழ வேண்டும். இங்கு இருக்கக் கூடிய ஒவ்வொருவரும் தங்களது கடமை என்ன என்பதை உணர்ந்து செயல்பட்டு வாழ்வில் முனைனேற்றமடைய வேண்டும் என்றார்.

    முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெற்றிவேலன் வாழ்த்தி பேசினார். 

    தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை முதன்மையர் சண்முகசுந்தரம்  நன்றி கூறினார்.


    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் மணிகண்டன் (வயது 25). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் செங்குணம் பாலம்பாடி அருகே வயலில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    12 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை புதைபடிமங்களை கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    புதை படிமங்கள் ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ் பல்வேறு நாடுகளில் கண்டெடுத்த அரியவகை கடல்சார் உயிரினங்களின் படிமங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டர்  வெங்கட்பிரியாவிடம் ஒப்படைத்தார்.

    இதுக்குறித்து புதை படிமங்கள் ஆராய்ச்சியாளர் நிர்மல் ராஜ் கூறியதாவது,
    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அடியில் இருந்தது.

    அப்போது வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின.சாத்தனுரில் கண்டெடுக்கப்பட்ட கல்மர படிமம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

    அதுமட்டுமின்றி, 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.

    உலகின் பல்வேறு நடுகளுக்குச் சென்று கடல்சார் உயிரினங்கள் குறித்தும் , புதை படிமங்கள் குறித்தும் ஆரய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நான் கண்டறிந்து எடுத்த மடாஸ்கர் மாநாட்டில் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் தலைக்காலி படிமங்கள்,  

    பொலிவியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல் சுறாவின் பல் படிமங்கள் போன்றவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக உள்ள அரசு அருங்காட்சியக்த்தில் வைப்பதற்காக கலெக்டரிடம் வழங்கியுள்ளேன் என்றார்.

    ×