என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் ரூ. 1கோடியே 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் பல்வேறு சாலை பணிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் இந்த ஆண்டு பெரம்பலூர் பாலக்கரை முதல் துறைமங்கலம் வரையிலான சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அப்போது பணியினை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டு விட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது விழுப்புரம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி, உதவி கோட்ட பொறியாளர் மாயவேல்,
உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் கட்டுப்பாட்டு பொறியாளர்கள் சீனிவாசன், செல்வராஜ் மற்றும் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டு கொரோனா நிதி வழங்கினார். இரண்டாவதாக பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம்.
மூன்றாவதாக கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
சாலைகளில் நடைபெறும் விபத்துக்களை குறைக்கும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி நம்மைக் காக்கும் 48 மணி நேர திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் ரூ.51 கோடி மதிப்பில் 58 ஆயிரத்து 193 பேர் உயிர்களை முதல்வர் காப்பாற்றியுள்ளார்.
பள்ளிகளில் காலைச்சிற்றுண்டி வழங்கும் அற்புதமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 கோவில்களுக்கு ரூ.ஆயிரம் கோடி அரசு செலவில் குடமுழுக்கு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2 ஆயிரத்து 566 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கட்சி பேச்சாளர் காரைக்குடி கணேசன் உட்பட பலர் பேசினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் கிளை செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலகண்டன்,மாவட்ட பொருளாளர் மணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாய மின்இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கிவரும் மின்மாற்றிகள் பழுதடைந்தால் அதனை விதிப்படி 48 மணிநேரத்திற்குள் பழுது நீக்கம் செய்து தடையின்றி மின்விநியோகம் செய்ய வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்துறையில் தளவாட சாமான்கள், மின்மாற்றிகள் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக போதுமான வாகனங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு 2022-2023ம் ஆண்டிற்கு 50 ஆயிரம் இலவச மின்இணைப்பு வழங்குவதாக அறிவித்த கோட்டாவில் சாதாரண முன்னுரிமையில் இலவச மின்இணப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏரி, குளம் மற்றும் நீர் ஆதாரபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அரசியல் பாகுபாடின்றி அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் விவசாய நிலங்களில் சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினரே சுடுவதற்கு அனுமதி அளித்துள்ளதைப் போல பெரம்பலூர் மாவட்டத்திலும், வனத்துறை மூலம் விவசாய நிலங்களில் சேதாரம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளைச் சுடுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரம் பதிவு செய்து வருவதைப் பற்றி பதிவு துறை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விபத்தில் உயிரிழிப்பவரின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து அறிவித்ததை அரசாணையாக வெளியிட்டு மத்திய அரசு அமல்படுத்திடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சுந்தரராஜன், செல்லகருப்பு, ஜெயப்பிரகாஷ், ராஜா, ரகுபதி, துரைராஜ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் :
கொட்டரை நீர்தேக்கம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதியின்படி கொட்டரை நீர்தேக்கம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இலவச வீடு மற்றும் வீட்டுமனைபட்டா வழங்கவேண்டும்,
அரசு வேலை, சிறப்பு கடன் அட்டை, பாசன வசதி ஏற்படுத்திதருதல், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல், நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு பணம் பட்டுவாடா செய்தல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷமிட்டனர்.
பின்னர் மாநிலதலைவர் விசுவநாதன் கூறுகையில், கொட்டரை நீர்தேக்கம் அணை கட்ட நிலம் கொடுத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தியூர் ஊராட்சியில் உள்ள காலனி தெருவுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதிமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் லெப்பைக்குடிகாடு - அகரம்சீகூர் மெயின்ரோட்டில் அந்தியூர் பிரிவு சாலை பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசாரும், வருவாய்த்துறையினரும், அந்தியூர் ஊராட்சி நிர்வாகத்தினரும் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
30 நாட்கள் பயிற்சியில் அங்கக வேளாண்மையில் அங்கக வேளாண்மையின் கூறுகள், மண்வளப் பாதுகாப்பு, நல்லவிதை தேர்வு, அங்கக மாற்றத்திற்கான தேவைகள், மண்ணின் ஊட்டச்சத்து மேலண்மை, அங்கக வேளாண்மையில் களைக்கட்டுப்பாடு, நீர்பாசனம், சொட்டுநீர் பாசனம்,
தெளிப்புநீர் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நாற்புழு மேலாண்மை, அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணையம்,
மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பராம்பரிய தொழில் நுட்பங்கள் அங்கக வேளாண்மையில் அறுவடை பின்செய் நேர்த்தி தான்ய சேமிப்பு தர உறுதி அளித்தல், அங்கக வேளாண்மை சான்றளிப்பு, அங்கக வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல், அங்கக வேளாண்மையில் ஆரோக்கியம் மற்றும்
பாதுகாப்பு பராமரித்தல் ஆகிய தலைப்புகளில் வகுப்பறை பாடம் செயல்விளக்கம், வயல்வெளிப்பார்வை ஆகியவை சம்மந்தப்பட்ட நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 20 பயனாளிகள் பயிற்சி பெற்றனர்.
நிறைவு விழாவிற்கு பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி தலைமை வகித்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இதில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கீதா, வேளாண்மை அலுவலர் அமிர்தவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம், வலயப்பாடி, வேப்பூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. அதாவது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே அந்த மாநிலத்திற்கும், நமது மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒன்று.
அந்த அடிப்படையில் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கேற்றவாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்பீடு செய்து கட்டண உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து அளித்து இருக்கிறார்கள். அது தயார் நிலையில் உள்ளது.
அதனைக்கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கவில்லை.
டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசினால் தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் நம்முடைய மாநில முதல்-அமைச்சர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பஸ்களை இயக்க எங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் தொலைதூரமான அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் எந்த அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதோ அதே அளவில் நாமும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் அந்த மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி தான் அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
14வது ஊதிய குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது முதல்வர் தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. வருகிற மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் சீரமைக்கப்படும்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. கேரளா, தமிழ்நாடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி அந்த பேருந்துகளில் மட்டுமே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.
போக்குவரத்து துறை ரூ.48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை சீரழிக்கப்பட்டது. அதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 2000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பலூரில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க போலீஸ் உதவி மையம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, எலந்தலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையின் காவல் (போலீஸ்) உதவி மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார்,
பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு போலீஸ் உதவி மையத்தினை திறந்து வைத்தனர்.
அடைக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து இந்த போலீஸ் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு புகாராக தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூரில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பிலிமிசை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். அரசு பஸ் டிரைவர்.
இவரது மகள் ராஜேஸ்வரி வயது 29. நேற்று மாலை வீட்டில் இருந்த ராஜேஸ்வரி திடீரென்று பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேஸ்வரி திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.