என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தியூர் ஊராட்சியில் உள்ள காலனி தெருவுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதிமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் லெப்பைக்குடிகாடு - அகரம்சீகூர் மெயின்ரோட்டில் அந்தியூர் பிரிவு சாலை பஸ் நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசாரும், வருவாய்த்துறையினரும், அந்தியூர் ஊராட்சி நிர்வாகத்தினரும் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story






