search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியைபார்வையிட்டு ஆய்வு செய்த தலைமை பொறியாளர் சந்திரசேகர்.
    X
    பெரம்பலூரில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியைபார்வையிட்டு ஆய்வு செய்த தலைமை பொறியாளர் சந்திரசேகர்.

    பெரம்பலூரில் ரூ. 1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி

    பெரம்பலூரில் ரூ. 1கோடியே 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் பல்வேறு சாலை பணிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் இந்த ஆண்டு பெரம்பலூர்  பாலக்கரை முதல் துறைமங்கலம்  வரையிலான சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியினை நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.

    அப்போது பணியினை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டு விட வேண்டும் என  அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது விழுப்புரம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி, உதவி கோட்ட பொறியாளர் மாயவேல்,

    உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் கட்டுப்பாட்டு பொறியாளர்கள் சீனிவாசன், செல்வராஜ் மற்றும் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×