என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நிறைவு விழா

    திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

    பெரம்பலூர்: 

    பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் அங்கக உற்பத்தியாளர் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

    30 நாட்கள் பயிற்சியில் அங்கக வேளாண்மையில் அங்கக வேளாண்மையின் கூறுகள், மண்வளப் பாதுகாப்பு, நல்லவிதை தேர்வு, அங்கக மாற்றத்திற்கான தேவைகள், மண்ணின் ஊட்டச்சத்து மேலண்மை, அங்கக வேளாண்மையில் களைக்கட்டுப்பாடு, நீர்பாசனம், சொட்டுநீர் பாசனம், 

    தெளிப்புநீர் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நாற்புழு மேலாண்மை, அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணையம், 

    மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பராம்பரிய தொழில் நுட்பங்கள் அங்கக வேளாண்மையில் அறுவடை பின்செய் நேர்த்தி  தான்ய சேமிப்பு தர உறுதி அளித்தல், அங்கக வேளாண்மை சான்றளிப்பு, அங்கக வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல், அங்கக வேளாண்மையில் ஆரோக்கியம் மற்றும் 

    பாதுகாப்பு பராமரித்தல் ஆகிய தலைப்புகளில் வகுப்பறை பாடம் செயல்விளக்கம், வயல்வெளிப்பார்வை ஆகியவை சம்மந்தப்பட்ட நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 20 பயனாளிகள் பயிற்சி பெற்றனர்.


    நிறைவு விழாவிற்கு பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி தலைமை வகித்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இதில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கீதா, வேளாண்மை அலுவலர் அமிர்தவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×