என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    யோகா விழிப்புணர்வு போட்டி

    யோகா விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை (14ம்தேதி) நடைபெறவுள்ள விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொள்ள இரு பாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:

    மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம்தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்த  ஆண்டும் யோகா தினம் கொண்டாட  முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.


    யோகா தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் நாளை (14ம் தேதி) மற்றும் வரும் ஜூன் 20ம் தேதிகளில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேருயுவகேந்திராவுடன் இணைத்துகொண்டு செயல்பட்டு வரும் 

    இளையோர் மன்றங்களின் மூலம் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தேசிய தன்னார்வ தொண்டர்களை கொண்டு கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளையோர்களிடையே யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 

    யோகா செய்முறை பயிற்சிகள், யோகாவின் கற்றுக்கொள்வதின் பயன்கள், யோகா பற்றிய வினாடி- வினா, கட்டுரை, ஒவியம் போன்ற பல்வேறு விதமான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இருபாலரும் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×