என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம்

    சூறைக்காற்றில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன
    பெரம்பலூர்:

    தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 8-ந் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஆந்திரா, 

    ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவியது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது. இதில் ஓரிரு மாவட்டங்களில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. மாநகர் மற்றும் துறையூர், தா.பேட்டை, மணப்பாறை, துவரங்குறிச்சி, துவாக்குடி பகுதிகளில் திடீரென வானில் கருமேகங்கள் சூழந்து காற்று வீசியது.

    அதன்பிறகு அரை மணி நேரத்துக்கு லேசாக மழை தூறி கொண்டே இருந்தது. மழை விட்டாலும் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சூைறக்காற்றுடன் பெய்த மழையால் தொண்டமாந்துறை, குரும்பலூர், மூலக்காடு, விசுவக்குடி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து பாதிப்புக்குள்ளானது. 

    வேளாண்துறையினர் வாழை சேத மதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×