என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட நாகராஜ்
மாமுல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்து கொலை
மாமுல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளரை ரவுடிகள் அடித்து கொன்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் இவரது மகன் நாகராஜன் (வயது 44). மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் எழுத்தாணி (எ) பிரபாகரன் (29), ஆனந்த் மகன் ரகு (எ) ரகுநாத் (23) ஆகிய இருவரும் மெடிக்கல் கடை நடத்தி வரும் நாகராஜை நீண்ட நாட்களாக மிரட்டி பணம் பெற்று வந்ததாக தெரிகிறது.
நேற்றிரவும் வழக்கம் போல் மாமூல் (பணம்) கேட்டு கடை மூடும் நேரத்தில் நாகராஜை மிரட்டி உள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜன் இது குறித்து மாமுல் கேட்ட இருவரின் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜனை ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று சரமாரியாக ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த நாகராஜ், ரத்தம் வழிந்த நிலையில் தட்டுதடுமாறி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அலறிதுடித்து, அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றனர்.
இங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில்,
பயந்த சுபாவம் கொண்ட மெடிக்கல் கடைக்காரரிடம் மாமூல் பெற்ற ரவுடிகள் இருவரும், போலீசில் புகார் கொடுத்தால் சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடுவோம் எனவும் ஜாமீன் கிடைக்காது,
பின்னர் கடையை திறக்க முடியாது என மிரட்டியதால் புகார் கொடுக்க தயங்கி நிலையில், நாகராஜன் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு, இது குறித்து போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ரவுடிகள் இருவரும் தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளனர் என தெரியவருகிறது. மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளான ரவுகளை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
Next Story






