
பெரம்பலூர் அருகே குரும்பலுாரில் உள்ள மிகவும் பிற்படுத்தபட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குரும்பலூரில் உள்ள மிகவும் பிற்படுத்தபட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவுசெய்ப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும்,
மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களின் தரம்குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போர்வைகள் உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா எனவும், விடுதியில் குடிநீர், தங்கும்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்றும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் தொல்பொருள் படிமங்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்படவுள்ள பகுதிகளையும், அலுவலகத்தை சுற்றி பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி , குரும்பலுார் பேரூராட்சி செயல் அலுவலர் மெர்ஸி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.