என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகரம் சீகூர் கிராம சபை கூட்டம் நடந்தபோது எடுத்தப்படம்.
33 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
33 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 33 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அகரம் சீகூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வயலூர் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க கோரியும், ஊரின் நடுவே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கிருத்திகா இளையராஜா, ஊராட்சி செயலர் சுமதி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்தியூர் பாலசுந்தரம், ஒகளுர் அன்பழகன், திருமாந்துறை வேளாங்கண்ணி, கீழப்பெரம்பலூர் சத்யா காமராஜ், கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஊராட்சி செயலர் பழனிவேல், வயலப்பாடி உமா பரமசிவம், வேப்பூர் தனம் பெரியசாமி, பெருமத்தூர் சுரேஷ், பென்னகோணம் ஜெயலட்சுமி, சித்தளி ராஜா,
குன்னம் தனலட்சுமி உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டனர்.புதிய முயற்சியாக சில கிராம ஊராட்சிகளில் சென்ற ஆண்டு வரவு-செலவு காண பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Next Story