என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| உதகமண்டலம் | ||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| ஆர்.கணேஷ் | காங்கிரஸ் | 65530 | ||
| எம்.போஜராஜன் | பா.ஜ.க | 60182 | ||
| சுரேஷ்பாபு | ம.நீ.ம. | 4935 | ||
| லட்சுமணன் | அமமுக | 1273 | ||
| ஜெயக்குமார் | நாம் தமிழர் | 6381 | ||
| கூடலூர் | ||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| பொன் ஜெயசீலன் | அதிமுக | 64496 | ||
| காசி லிங்கம் | திமுக | 62551 | ||
| யோகேஸ்வரன் | தேமுதிக | 1173 | ||
| கேதீஸ்வரன் | நாம் தமிழர் | 7317 | ||
| பாபு | ம.நீ.ம. | 960 | ||
| குன்னூர் | ||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| ராமச்சந்திரன் | திமுக | 61820 | ||
| கப்பச்சி வினோத் | அதிமுக | 57715 | ||
| கலைச்செல்வன் | அமமுக | 2527 | ||
| ராஜாகுமார் | ம.நீ.ம. | 3621 | ||
| லாவண்யா | நாம் தமிழர் | 7252 | ||
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், ரசிக்க ஆளின்றி பூங்காக்கள் வெறிச்சோடின.
ஊட்டி:
கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்தாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.
இதனால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. வழக்கம்போல் கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கினாலும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சீசன் தொடரவில்லை. வழக்கமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே 1-ந் தேதி கோடை விழா தொடங்கி நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகளால் கோடை விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இல்லை. மேலும் வார விடுமுறை நாட்களில் நடைபெறும் கண்காட்சிகள் நடத்த வாய்ப்பு இல்லை.
கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் நன்றாக வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டது. சீசனையொட்டி தற்போது ரோஜா செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. தாவரவியல் பூங்காவிலும் மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வராததால் கண்டு ரசிக்க ஆள் இல்லாமல் வாடியும், வெறிச்சோடியும் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டும் முழு ஊரடங்கால் கோடை விழா ரத்தானது குறிப்பிடத்தக்கது.

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர்.
அதன்படி கடந்த 29, 30-ந் தேதிகளில் விற்பனை எண் 17-க்கான தேயிலைத்தூள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 16 லட்சத்து 3 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 29 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
ஏலத்தில் 19 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 86 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் மதிப்பு ரூ.23 கோடியே 31 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.3 விலை உயர்வு ஏற்பட்டது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.296, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.98 முதல் ரூ.104 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.186 வரை ஏலம் போனது.
டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.96 முதல் ரூ.104 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.151 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தேயிலைத்தூள் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம்(விற்பனை எண்-18) வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 20 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

நீலகிரியில் இரண்டு தொகுதிளிலும் அதிமுக வெற்றி பெற்று உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்று தொகுதிகளில் போட்யிட்ட முக்கிய வேட்பாளர்களின் வாக்குகள் விவரம்:-
| 109. கூடலூர் | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | பொன் ஜெயசீலன் | அதிமுக | 3407 | ||
| 2 | காசி லிங்கம் | திமுக | 2906 | ||
| 3 | யோகேஸ்வரன் | தேமுதிக | 32 | ||
| 4 | கேதீஸ்வரன் | நாம் தமிழர் | 244 | ||
| 5 | பாபு | ம.நீ.ம. | 46 | ||
| 110. குன்னூர் | |||||
| வ.எண். | வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | ||
| 1 | கப்பச்சி வினோத் | அதிமுக | 3641 | ||
| 2 | ராமச்சந்திரன் | திமுக | 3079 | ||
| 3 | கலைச்செல்வன் | அமமுக | 422 | ||
| 4 | ராஜாகுமார் | ம.நீ.ம. | 107 | ||
| 5 | லாவண்யா | நாம் தமிழர் | 360 | ||
உதகமண்டலத்தில் பா.ஜனதா- காங்கிரஸ் நேருக்கும் நேர் மோதும் நிலையில், மற்ற இரண்டு தொதிகளிலும் அதிமுக- திமுக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மூன்று தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விவரம்:-
| உதகமண்டலம் | ||||
| வ.எ | வேட்பாளர்கள் | கட்சி | ||
| 1 | ஆர்.கணேஷ் | காங்கிரஸ் | ||
| 2 | எம்.போஜராஜன் | பா.ஜ.க | ||
| 3 | சுரேஷ்பாபு | ம.நீ.ம. | ||
| 4 | லட்சுமணன் | அமமுக | ||
| 5 | ஜெயக்குமார் | நாம் தமிழர் | ||
| கூடலூர் | ||||
| வ.எ | வேட்பாளர்கள் | கட்சி | ||
| 1 | காசி லிங்கம் | திமுக | ||
| 2 | பொன் ஜெயசீலன் | அதிமுக | ||
| 3 | யோகேஸ்வரன் | தேமுதிக | ||
| 4 | கேதீஸ்வரன் | நாம் தமிழர் | ||
| 5 | பாபு | ம.நீ.ம. | ||
| குன்னூர் | ||||
| வ.எ | வேட்பாளர்கள் | கட்சி | ||
| 1 | ராமச்சந்திரன் | திமுக | ||
| 2 | கப்பச்சி வினோத் | அதிமுக | ||
| 3 | கலைச்செல்வன் | அமமுக | ||
| 4 | ராஜாகுமார் | ம.நீ.ம. | ||
| 5 | லாவண்யா | நாம் தமிழர் | ||
கூடலூர் அருகே தினமும் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மனித-காட்டுயானை மோதல்கள் ஏற்படுகிறது. பசுந்தீவன தட்டுப்பாடு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே செளுக்காடி, 3-ம் மைல், நிமினி வயல் உள்பட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தினமும் 2 காட்டுயானைகள் காலையில் ஊருக்குள் வருகிறது. பின்னர் செளுக்காடி முதல் சாலை வழியாக நடந்து பிற கிராமங்களை கடந்து செல்கிறது.
இதன் காரணமாக காலை நேரத்தில் பால் கொண்டு செல்லும் விவசாயிகள், பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் பீதியில் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் வாகன போக்குவரத்தும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் காட்டுயானைகள் எதிரே வரும் என்ற பீதியில் செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
காட்டுயானைகளால் மனித உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் நிம்மதி இழந்து உள்ளோம். தினமும் சரியாக காலை 7 மணிக்கு காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது. அது எந்த திசையில் இருந்து வருகிறது என்று தெரிவதில்லை. இதனால் அச்சத்துடன் வெளியே நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதேபோன்று மாலை நேரத்திலும் காட்டுயானைகள் வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழலில் வசிப்பதாக உணர்கிறோம். வனத்துறையினரும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் கீழ் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணைகள் உள்ளது. அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடக்கிறது. இதன் மூலம் தினமும் 248.47 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் முக்குருத்தி, பைக்காரா, சிங்காரா, மாயார், மரவகண்டி ஆகிய மின் நிலையங்கள் உள்ளன. பருவமழை காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
பின்னர் மின் உற்பத்தி செய்வதற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கோடை மழை போதிய அளவில் பெய்யாததாலும், மின் உற்பத்திக்காக அணைகளில் தண்ணீர் அதிகளவு பயன்படுத்தப்பட்டதாலும் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் மசினகுடி, சிங்காரா மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின் உற்பத்தி செய்வதற்காக காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து செல்லும் தண்ணீர் கிளன்மார்கன், அணையில் தேக்கி வைக்கப்பட்டு, மசினகுடி சிங்காரா மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி மின்வாரிய அணைகளில் தண்ணீர் இருப்பு 40 சதவீதமாக இருந்தது. அணைகளில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது காமராஜ் சாகர் அணையில் 2 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, இதன் மூலம் மின் உற்பத்தி தடை இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது என்றார். கோடை காலம் என்பதால் சமவெளி பகுதிகளில் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு மின்உற்பத்தி நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட, பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த 27-ந் தேதி 72 பேர், நேற்று முன்தினம் 67 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 480 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 430 ஆக குறைந்து இருக்கிறது. இது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளதை காட்டுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பிற மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது தினமும் 1,200-ல் இருந்து 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து ஓரிரு நாளில் முடிவுகள் கிடைத்துவிடும். வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

இதில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் 50 சதவீதம் பேருக்கும், மற்றவர்கள் 50 சதவீதம் பேருக்கும் என 1,300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரிக்கு 96 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் வரவழைக்கப்பட உள்ளது. விரைவில் வந்தவுடன் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டாலும், பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 20-ந் தேதி முதல் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்ளே வர அனுமதி இல்லை என்று ஒட்டப்பட்டது. தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டாலும், தொடர்ந்து பணியாளர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி பூந்தொட்டிகள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மலர் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. மலர் செடிகளுக்கு களை எடுப்பது, உரமிடுவது, மருந்து தெளிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களில் இருந்து விழுந்து கிடக்கும் இலைகளை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்.
பெரிய புல்வெளி மைதானத்தில் வளர்ந்த புற்களை சமமாக வெட்டி, வெட்டிய புற்களை அப்புறப்படுத்துகின்றனர். பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது பராமரிப்பு பணி எவ்வாறு நடைபெறுமோ அதேபோல் பூங்கா மூடிய பின்னரும் நடந்து வருகின்றது.
கொரோனா 2-வது அலை பரவி வருவதால் நடப்பாண்டிலும் கோடை சீசன் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் இயற்கை அழகுடன் கூடிய பூங்காவை பராமரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:
குன்னூர் | திமுக |
கூடலூர் | திமுக |
உதகமண்டலம் | காங்கிரஸ் |
நீலகிரி மாவட்ட போலீசார் முகாமிட்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர்.
கூடலூர்:
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோன்று குண்டல்பேட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சாலை செல்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கு வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி-கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.
நீலகிரி-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் சாலை மூடப்பட்டு உள்ளது. அங்கு நீலகிரி மாவட்ட போலீசார் முகாமிட்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். எனினும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கர்நாடக போலீசார் கூறும்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

ஊட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கப்பத்தொரை கிராமத்தை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 66). கூலி தொழிலாளி. இவர் தோட்ட வேலைகளுக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் முஸ்தபா அதே பகுதியில் உள்ள 13 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம் பழகி உள்ளார். பின்னர் அவர் சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில், அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கேட்ட போது, சிறுமி அழுதபடி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முஸ்தபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.