என் மலர்
நீலகிரி
கோத்தகிரியில் தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள சக்திமலை கோவிலுக்கு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனையறிந்த குடியிருப்பு வாசிகள் தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றக்கூடாது என்று மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியதாக தெரிகிறது.
ஆனாலும் தொடர்ந்து தனியார் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற மருத்துவமனை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்ததோடு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் எனக்கூறி அந்த தனியார் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரமேஷ், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த பகுதி குடியிருப்புக்கள் அதிகமாக உள்ளதால், சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்களின் எதிர்ப்பு உள்ளது. இது குறித்து வருவாய்த்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முழு ஊரடங்கிலும் நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தோட்டங்களில் பறித்த பச்சை தேயிலையை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று, தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
தேயிலையை தொடர்ந்து 10 நாட்கள் பறிக்காமல் விட்டால் இலைகள் முற்றி போய்விடும். தொடர்ந்து பறித்தால் மட்டுமே பராமரிப்பு பணியை மேற்கொள்ள முடியும். தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் சமூக இடைவெளிவிட்டு தேயிலை பறிக்க வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முககவசங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தொற்று பரவலை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகளில் உற்பத்தி நடந்து வருகின்றன.
நீலகிரியில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், பெரிய தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. சில சிறிய தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தேயிலை கொண்டு வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருப்பு வைக்கப்பட்ட தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டதால், தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை பறிக்கும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
கொரோனா உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் போதுமான படுக்கை வசதிகள், வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 14 மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஊழியர்கள் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்கள். நீலகிரியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கோத்தகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதே பள்ளியின் மேல் தளத்தில், கூடுதலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும் 96 படுக்கைகள் அமைக்கப்பட்டன.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகளில் தற்காலிக சிகிச்சை மையங்களை தயார் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி முதற்கட்டமாக கோத்தகிரி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 65 படுக்கைகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டது. சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சிகிச்சைக்காக நோயாளிகள் பெருமளவில் அனுமதிக்கப்பட்டதால், படுக்கைகள் அனைத்தும் நிரம்பின. இதையடுத்து மேலும் ஒரு தனியார் பள்ளியில் 102 படுக்கைகள் வசதியுடன் 2-வது சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதே பள்ளியின் மேல் தளத்தில், கூடுதலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும் 96 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த மையத்தை கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் பழங்குடியின மக்கள் அனுப்பி வருகின்றனர்.
குன்னூர்:
கொரோனா தொற்று பரவலை அடுத்து மக்கள் அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கைகளை கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினிக்கு பதிலாக பூசக்காய் என்ற பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக்காய்களை சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காலத்தில் அடிக்கடி கைகழுவுவதற்கு சோப்புக்கு பதிலாக பூசக்காய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் பழங்குடியின மாணவர்கள் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் வனப்பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், வனங்களில் கிடைக்கும் சோப்புக்காய் என அழைக்கப்படும் பூசக்காயை நசுக்கினால் அதில் உள்ள வேதிப்பொருள் நுரைபோல் வெளிவரும். அது கிருமிகளை அழிக்கக்கூடியது. சோப்பு நிறுவனங்களே இந்த காயை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ளது புதுக்காடு கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருமி நாசினிக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் அரிய வகை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த மக்கள் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரத்தில் கிடைக்கும் பூசக்காய்களை சேகரித்து, அவற்றை வெயிலில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காலத்தில் அடிக்கடி கைகழுவுவதற்கு சோப்புக்கு பதிலாக பூசக்காய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் பழங்குடியின மாணவர்கள் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் வனப்பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கூறுகையில், வனங்களில் கிடைக்கும் சோப்புக்காய் என அழைக்கப்படும் பூசக்காயை நசுக்கினால் அதில் உள்ள வேதிப்பொருள் நுரைபோல் வெளிவரும். அது கிருமிகளை அழிக்கக்கூடியது. சோப்பு நிறுவனங்களே இந்த காயை தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை தலா ரூ.2,000 கடந்த 15-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு, ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 23-ந் தேதி காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் 21-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் செயல்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது.
ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வந்தனர். மூடப்பட்டு இருப்பதை பார்த்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. நடப்பு மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்காமல் இருந்த ரேஷன் அட்டைதாரர்கள் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். ரேஷன் கடை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 3 ரேஷன் கடைகள் இயங்கியது. எல்க்ஹில் ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சேரிங்கிராசில் வரிசையாக உள்ள 3 ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வருபவர்கள் தங்களது ரேஷன் அட்டையை கையில் கொண்டு வருவதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் காண்பித்து வரலாம் என்று தெரிவித்தனர்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நெல்லிமேடு, அம்பலவயல் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் கார்த்திக்ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
முகாமில் சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரியில் முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே வந்த 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி:
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நேற்று ஊட்டியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை ஒட்டி தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்களா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் (குட்டி விமானம்) கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதன் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முழு ஊரடங்கில் இளைஞர்கள் கூட்டமாக நின்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். நீலகிரியில் முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே வந்த 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை முககவசம் அணியாததாக 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக- கர்நாடகா மாநில எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் 3 வாகனங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி முகாமில் கக்குச்சி, தாவணெ, கெரடாமட்டம், ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் உள்ள 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் இருந்தது. இதனால் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வெறிச்சோடியது. ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லை என்று போர்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து நீலகிரிக்கு 7,600 கொரோனா தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊட்டி அருகே தாவணெ பகுதியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கக்குச்சி, தாவணெ, கெரடாமட்டம், ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் உள்ள 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாததால், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மருந்தகங்களில் பணிபுரிபவர்கள், காய்கறிகள் வினியோகம் செய்பவர்கள், மின் ஊழியர்கள், டிரைவர்கள் என 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிக்கந்தர், ராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள எல்லையில் சாலைகள் மூடப்பட்டு உள்ளது.
ஆனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏராளமான சரக்கு லாரிகள் கொண்டு செல்கிறது. இதனால் மாநில எல்லைகளில் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிக்கந்தர், ராஜா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் ஏற்றுக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே பதுக்கிவைத்து வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த ஊட்டி பார்சன்வேலி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 165 மதுபாக்கெட்டுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல மற்றொரு காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த 206 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தேவர்சோலை தேவன்-2 பகுதியை சேர்ந்த சஞ்சீவி தேவ் (29) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து வந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் மினி லாரிகளில் 42 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளில் வந்த பந்தலூர் அட்டி வயலை சேர்ந்த தியாகராஜா (34), சோலூர் பேரூராட்சி கண்ணெரிமுக்கு பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதனிடையே தேவாலா போலீசார் நீர்மட்டம் என்ற இடத்தில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காய்கறிகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள், 46 வெளிமாநில மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து லாரியில் இருந்த பந்தலூர் கூவமூலா பகுதியை சேர்ந்த முகம்மது (32), அட்டியை சேர்ந்த சலீம் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்-கர்நாடக எல்லையில் ஒரே நாளில் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அருவங்காட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்:
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி நேற்று அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையொட்டி குன்னூரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால் சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை. மேலும் முக கவசம் அணியாமல் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மொத்தம் ரூ.21 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஊட்டியில் தொற்று அதிகரித்து வருவதால், கூடுதலாக 300 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தினமும் 350 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 2,778 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அரசு மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரியில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 332 படுக்கைகளில் 312 படுக்கைகள் நிரம்பி விட்டன. 20 படுக்கைகள் காலியாக உள்ளது. ஐ.சி.யு. வார்டுகளில் உள்ள 36 படுக்கைகளில் 2 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது. 301 சாதாரண படுக்கைகளில் 259 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 42 படுக்கைகள் காலியாக உள்ளது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 110 படுக்கைகளும் நிரம்பியது. மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள 678 படுக்கைகளில் 469 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 209 படுக்கைகள் காலியாக இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாலும், சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் அந்த பள்ளி கூடுதலாக 300 படுக்கை வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு உள்ளது.
அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான படுக்கை, கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.