என் மலர்
நீலகிரி
திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 600 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி நிதியுதவியும், 4.8 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 600 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி நிதியுதவியும், 4.8 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின்கீழ், குடும்பங்களில் பட்டப் படிப்பு படித்த பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம், பட்டப் படிப்பு அல்லாதோருக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியாகவும், அதனுடன் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
2021-22 ம் ஆண்டில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு பயின்ற 330 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 65 லட்சமும், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற 270 பயனாளிகளுக்கு ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி, 4.8 கிலோ தங்கம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஊட்டி வட்டத்தைச் சேர்ந்த 85 பட்டதாரிகளுக்கும், 36 பட்டதாரி அல்லாதோருக்கும், குன்னூர் வட்டத்தைச் சேர்ந்த 81 பட்டதாரிகளுக்கும், 28 பட்டதாரி அல்லாதோருக்கும், கோத்தகிரி வட்டத்தைச் சேர்ந்த 49 பட்டதாரிகளுக்கும், 27 பட்டதாரி அல்லாதோருக்கும், கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த 115 பட்டதாரிகளுக்கும், 179 பட்டதாரி அல்லாதோருக்கும் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு 4.8 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோத்தகிரி படுகர் சமுதாய மக்கள் வசிக்கும் திம்பட்டியைச் சேர்ந்த 8 ஊர்கள் சார்பில், மாகாளி அம்மன் கோவில் திருவிழா பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்றது.
கோத்தகிரி:
கோத்தகிரி படுகர் சமுதாய மக்கள் வசிக்கும் திம்பட்டியைச் சேர்ந்த 8 ஊர்கள் சார்பில், மாகாளி அம்மன் கோவில் திருவிழா பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்றது. படுகர் இன மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாகாளி அம்மன் திருவிழாவை தங்களது பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி கொண்டாடுவது வழக்கம்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.இந்த ஆண்டு பிப்ரவரி 21&ந் தேதி இவ்விழா தொடங்கியது. ஜக்கலோடை கிராமத்தில் பாரம்பரிய திருவிழா 5&ஆம் நாளான நேற்று நடைபெற்றது.அதிகாலை முதலே 8 ஊர்களின் பக்தர்களும் கலாசார உடை அணிந்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் ஊர்வலத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் எதிர்வரும் கோடை சீசன் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாவை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது.
தற்போது தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் விடுமுறையை கழிக்க குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலாபயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது. ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா, தொட்டபெட்டா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா இடங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டத்தை அதிகம் காண முடிகிறது. இதனால் ஓட்டல், லாட்ஜ்களும் பரவாக நிரம்ப தொடங்கி இருக்கின்றன.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 3,500 சுற்றுலாப் பயணிகள் வந்து இருந்தனர். நேற்று இது 9 ஆயிரம் ஆக அதிகரித்துக் காணப்பட்டது. அரசினர் ரோஜா பூங்காவுக்கு 1,500 பேர் வெள்ளிக்கிழமை வந்திருந்த நிலையில், நேற்று 3 ஆயிரம் ஆக அதிகரித்தது.
தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு சனிக்கிழமை 400 பேரும், மரவியல் பூங்காவுக்கு 100 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,800 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனர்.
மேலும், ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேரும் வந்திருந்ததோடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு இயற்கை சூழல் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்றும் ஊட்டியில் ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதனால் ஊட்டி உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சமவெளிப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், தற்போதே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் எதிர்வரும் கோடை சீசன் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாவை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மார்ச் 4-ந் தேதி திருவிழா தொடங்குகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்கு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமை யான முறையில் உள்ளூர் பக்தர்களை கொண்டு நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடக் கிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
7-ந் தேதி இரவு 10 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. இறுதி நாளான, 8-ந் தேதி காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கூடலூர், ஊட்டியில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ஊட்டி கலெக்டர் அம்ரித் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை பயன் படுத்தி, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்ப்பதும், பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:&
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகை யான பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாடு தடை விதிக் கப்பட்டுள்ளது.
நீலகிரி சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலா பயணி களின் வருகை அதிகரித்து வருகிறது. நமது மாவட்டத் தின் சுற்றுச்சுழலை பாது காக்க அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சேராத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சுழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க, அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக, தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூனார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இந்த கோவிலுக்கு மிக அருகில் பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பத்ரகாளியம்மன் கோவிலுக்குள் மர்மநபர்கள் சிலர் நுழைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு ஏதாவது பணம் இருக்கிறதா என பார்த்துள்ளனர்.
ஆனால் அங்கு எதுவும் இல்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே வந்தனர். அந்த கோவிலில் ஒன்றும் கிடைக்காததால் இங்கு உண்டியலில் உள்ள பணத்தை எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலின் நுழைவு வாயிலை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அங்குள்ள மற்றொரு கதவை திறக்க முயற்சித்தனர். அப்போது அந்த கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது. இதனால் பயந்து போன மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து உடனடியாக தப்பியோடி விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் வந்து பார்த்து விட்டு குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி பார்வையிட்டனர். விசார ணையில், மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள் ளையடிக்க முயன்றதும், அலாரம் அடித்ததால் தப்பி யோடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கோவிலில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் யார் என்பதை அறிய அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகிறார்கள். ஒரே நாளில் அடுத்தடுத்த கோவில்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
நிழற்கூரையை மக்களின் பயன்பாட்டுக்கு தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் திறந்து வைக்கிறார் என்று மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிக்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், 2022 டிசம்பர் 8-ந் தேதி வரை மாதந்தோறும் ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி வெலிங்டன் ராணுவ மருத்துவமனை சார்பில் ஜனவரி மாத இறுதியில் அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
இந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு நிழற்கூரை அமைப்பதற்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் முடிவு செய்தது.
இதற்காக குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய் மற்றும் தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து நிழற்கூரை அமைக்க தடையில்லா உத்தரவு வழங்கினர். அதைதொடர்ந்து, வெலிங்டன் ராணுவ குழுவினர் அளவீடு செய்து, நிழற்கூரை அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது.
இந்த நிழற்கூரையை மக்களின் பயன்பாட்டுக்கு தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் திறந்து வைக்கிறார் என்று மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புலியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகுள் உள்ளன. இந்த விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
பந்தலூர் தாலுகா, நெலாக்கோட்டை அருகே உள்ள சூஷம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது. இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி அவர் வளர்த்து வந்த பசுமாடு, கன்றுக்குட்டியுடன் மேய்ச்சலுக்கு சென்றன. இரவு நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. முகமது பசுமாடுகளை தேடி சென்றபோது, சூஷம்பாடி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள சமவெளி பகுதியில் 2 மாடுகளும் கழுத்தில் காயத்துடன் உயிரிழந்தபடி கிடந்தன. அவற்றை புலி அடித்து கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்த பிதர்காடு வனசரக அதிகாரி ராம்குமார், வனவர் ஜார்ஜ் பிரவீன்ஷன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில் பசுமாடுகளை கொன்றது புலி தான் என்பது உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது எங்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புலியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் 27ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரமையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இப்படி மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளில், பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,203 பணியாளர் கள் பணியில் ஈடுபட உள்ள னர்.
மேலும் பஸ் நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும், குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாட்களில் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப் பானது உலக சுகாதார நிறுவ னத்தின் அங்கீகாரம் பெற் றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.
எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந் தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் நடக்கும் முகாமுக்கு குழந்தை களை அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
குப்பை அகற்றும் பணியில் 360 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி முதல் கல்லார் வரை மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசி வருகின்றனர். இதனை வனவிலங்குகள் உண்பதால், அவற்றின் உடலுக்கு பாதிப்பு ஏறபடுகிறது.
இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலைரெயில் பாதையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை காட்டு யானைகள் சாப்பிடுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலைரெயில் பாதையை 2 நாட்கள் தூய்மை பணி நேற்று தொடங்கியது. இன்று 2&வது நாளாக மலைரெயில் பாதையில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை ரெயில் தண்டவாள பகுதியிலும், குன்னூர் சப்&கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தலைமையில் குன்னூர் மற்றும் கேத்தி ரெயில் நிலையம் பகுதியிலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தலைமையில் லவ்டேல் ஜங்ஷன் பகுதியிலும்,
உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா தலைமையில் அருவங்காடு ரெயில் தண்டவாள பகுதியில் தண்டவாளம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள், சாக்குப் பைகளில் சேகரிக்கப்பட்டன.
இந்த பணியில் 360 பணியாளர்கள் ஈடுபட்டனர். இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட ரெயில் தடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டாமலும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளும் இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரமையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இப்படி மாவட்டம் முழுவதும் 777 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 40,890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளில், பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,203 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பஸ் நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும், குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 2 நாட்களில் பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப் பானது உலக சுகாதார நிறுவ னத்தின் அங்கீகாரம் பெற் றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.
எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந் தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை மறுநாள் நடக்கும் முகாமுக்கு குழந்தை களை அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி:
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை செலுத்தாததால் கடந்த ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகள் நிலுவை தொகையை செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன. அதன்படி இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் நிலுவை தொகை வசூலாகி உள்ளது.
இதற்கிடையே நகராட்சி மார்க்கெட்டில் சில கடை உரிமைதாரர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். அவர்களிடம் வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரி அதிகாரிகள் வலியுறுத்தினர். பின்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து இறைச்சி கடைகள் உள்பட 11 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்து உள்ளனர். வாடகை செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தங்களது கடைக்கான குத்தகை உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடப்படும். ஊட்டி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வரிகள் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்றனர்.