search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறையினர் கேமரா பொருத்தியபோது எடுத்த படம்
    X
    வனத்துறையினர் கேமரா பொருத்தியபோது எடுத்த படம்

    பந்தலூர் அருகே புலியை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

    வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புலியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகுள் உள்ளன. இந்த விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

    பந்தலூர் தாலுகா, நெலாக்கோட்டை அருகே உள்ள சூ‌ஷம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது. இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி அவர் வளர்த்து வந்த பசுமாடு, கன்றுக்குட்டியுடன் மேய்ச்சலுக்கு சென்றன. இரவு நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. முகமது பசுமாடுகளை தேடி சென்றபோது, சூ‌ஷம்பாடி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள சமவெளி பகுதியில் 2 மாடுகளும் கழுத்தில் காயத்துடன் உயிரிழந்தபடி கிடந்தன. அவற்றை புலி அடித்து கொன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து, தகவல் அறிந்த பிதர்காடு வனசரக அதிகாரி ராம்குமார், வனவர் ஜார்ஜ் பிரவீன்‌ஷன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில் பசுமாடுகளை கொன்றது புலி தான் என்பது உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது எங்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புலியை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×