என் மலர்
நீலகிரி
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரிக்கு பஸ்சில் பயணிக்கு ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டதாக குன்னூர் மாணவி சாய்சோனு தெரிவித்துள்ளார்.
கோவை:
உக்ரைனில் மருத்துவம் படித்த கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் ஹங்கேரி வழியாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தனர்.
விமானநிலையத்தில், அவர்களை பெற்றோர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
உக்ரைனில் நிகழ்ந்த துயர சம்பவம் பற்றி குன்னூர் மாணவி சாய் சோனு கூறியதாவது:-
நான் உக்ரைனில் உள்ள வென்சிலா பகுதியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். என்னுடன் தமிழகம், இந்தியாவை சேர்ந்த மாணவிகளும் படித்து வந்தனர்.
போர் பதற்றம் என அறிவித்ததும், 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் என அனைத்தையும் வாங்கி கொண்டோம். இருப்பினும் உக்ரைனில் நீடித்த போர் பதற்றத்தால் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். என்னுடன் படித்த இந்தியர்களும் நாட்டிற்கு செல்ல தயாராகினர்.
இதையடுத்து அனைவரும் உக்ரைனின் மேற்கு பகுதி அருகே இருக்கும் ருமேனியா எல்லைக்கு செல்வதற்கு தயாரானோம். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக வந்த தகவலால் திட்டத்தை மாற்றி ஹங்கேரிக்கு பஸ்சில் பயணித்தோம். என்னுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் பயணமாகினோம். அனைவரும் இந்திய தூதரகம் அறிவுறுத்திய படி இந்திய தேசிய கொடியை அணிந்து கொண்டு பயணமானோம்.
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஹங்கேரிக்கு பஸ்சில் பயணிக்கு ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. 12 மணி நேர பயணித்திற்கு பிறகு ஹங்கேரி எல்லையில் உள்ள உக்ரோத் ரெயில் நிலையத்தை அடைந்தோம்.
அங்கிருந்து ரெயிலில் மீண்டும் 12 மணி நேரம் பயணித்து ஹங்கேரியை அடைந்தோம். எல்லை பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது. குளிரை பொருட்படுத்தாமல், ஊருக்கு செல்வதிலேயே கவனம் செலுத்தினோம்.
எங்களை ஹங்கேரி பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். எங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, எங்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டனர். எங்களை 24 மணி நேரம் கண்காணித்து, தேவையானதை வழங்கு வதற்கு என்று தனியாக அதிகாரிகளையும் நியமித்திருந்தனர். அவர்கள் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தோம். அங்கு மத்திய மந்திரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, எனது ஊரான குன்னூருக்கு சென்று விட்டேன். போருக்கு மத்தியில் உயிரை கையில் பிடித்து கொண்டு தற்போது ஊருக்கு வந்தது சேர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் உக்ரைனில் இருந்து திரும்பிய மற்ற மாணவர்கள் கூறும்போது, போர் தீவிரமாக இருப்பதால், உக்ரைன் கிழக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.நாங்கள் மேற்கு பகுதியில் இருந்ததால் ஹங்கேரி நாட்டுக்கு வர முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் சிறப்பாக செய்திருந்தது.ஹங்கேரியில் வசிக்கும் தமிழ் மக்கள் எங்களுக்கு மிகவும் உதவினர். உயிரை பணயம் வைத்து, சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தோம். தாய் நாடு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
நகராட்சி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டு கள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 19&ந் தேதி வாக்குப்பதிவு நடந் தது. 22&ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு கள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 294 கவுன் சிலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர். வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இன்று நடந்தது.ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டு இருந்தன. அங்கு நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அமருவதற்கான இருக்கைகளும் தயார் நிலையில் இருந்தது.
இன்று காலை ஊட்டி நகராட்சியில் வெற்றி பெற்ற 36 பேரும் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உள்ளே சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.காலை 10 மணிக்கு விழா தொடங்கியதும், ஒவ்வொரு கவுன்சிலர்களாக தனித் தனியாக உறுதிமொழியை வாசித்து கவுன்சிலர்களாக பதவி யேற்றனர். நகராட்சி கமிஷ னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதேபோல் நெல்லியாளம், கூடலூர், குன்னூர் நகராட்சிகள் மற்றும் கோத்தகிரி, நடுவட்டம் உள்பட 11 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்று கொண்டனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அனைத்து அலு வலகங்களும் விழாக் கோலத் துடன் காட்சியளித்தது.நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளுக்கும் தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது.
ஊட்டி:
ரஷியா- உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் கல்வி கற்று வரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், அங்கு குடியேறி வசித்து வருபவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உக்ரைனில் கல்வி கற்று வரும் 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்கள், குடியேறியவர்கள் பெயர், பாஸ்போர்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் செல்போன் எண், பணியில் இருப்பின் அதன் விவரம், தமிழகத்தில் வசிப்பிட முகவரி, இங்கு உள்ள செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, உறவினரின் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். அத்துடன் 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கூட்டம் நடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையின் அலுவல ர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறித்த சந்தேகங்கள் வணிகர் சங்க பிரதிநிதிகளால் எழுப்பப்பட்டது.
அதனைப் போக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் பெ.சே.லிவிங்ஸ்டன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது வணிகர்கள் 50 மைக்ரான் தடிமனுக்கு மேலான பொட்டலமிடும் கவர்களை மாவட்டத்தில் நிலவும் காலநிலையைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடை செய்து ஆணை பிறப்பித்துள்ள சூழலில் அந்த கோரிக்கையை ஏற்க இயலாது.வணிகர்கள் பொட்டலமிடு வதற்காக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது, இதனை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதை தவிர்க்க முடியாது என்றார்.
தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கூறும்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் பிரிவுகள் குறித்தும், உணவுப் பொருள்களைப் பொட்டலமிடும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பேசினார். இதில், நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் பரமேஸ்வரன், நீலகிரி புறநகர் வணிகர்கள் சங்கத் தலைவர் முகமது பாரூக், ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நபர்களுக்கு மொத்தம் ரூ.1,07,650 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப் படும் பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி நகராட்சி பகுதியில் ஓட்டல்கள், பேக்கரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 3 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6 ஆயிரம் அபராதமும், ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 700 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,300அபராதமும், பேரூ ராட்சி பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
குன்னூர் நகராட்சி பகுதி யில் 350 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1000 அபராதமும், ஊராட்சி பகுதியில் 400 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.800 அபராதமும், உலிக்கல், ஜெகதளா, கேத்தி பேரூராட்சி பகுதியில் 260 கிராம் பறி முதல் செய்யப்பட்டு ரூ.2,300 அபராதமும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 1 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,500 அபராதமும், பேரூராட்சி பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000 அபராதமும், கூடலூர் நகராட்சி பகுதியில் 1 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,000 அபராதமும், கூடலூர் ஊராட்சி பகுதியில் 8.350 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16,450 அபராதமும், தேவர்சோலை பேரூராட்சிப்பகுதியில் 750 கிராம் பறிமுதல் செய்யப் பட்டு ரூ.1,300 அபராதமும் விதிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் தலைமையில் ஊட்டி நகராட்சி பகுதி யில் ஆய்வு மேற்கொண்டதில் ரூ.12 ஆயிரமும், தனியார்
பிளாஸ்டிக் கடையில் தடைசெய்ய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய மைக்காக ரூ.55,500 அபராதமும் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நபர்களுக்கு மொத்தம் ரூ.1,07,650 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது.
ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. தன்னலமற்ற சேவையை ராணுவம் ஒருபோதும் மறக்காது என்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அப்போது நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் போர்வை, வாளி உள்ளிட்ட பொருட்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 2 முறை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த புதிய நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று நஞ்சப்பசத்திரத்தில் அமைக்கப்பட்ட புதிய நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தக்ஷின் பாரத் ஏரியா (தென் பிராந்திய) லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்து கொண்டார்.
அவர் மீட்பு பணியில் ஈடுபட்ட சந்திரன் என்பவரை அழைத்து நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்தார். மீட்பு பணியில் தன்னலமற்ற முயற்சிகளில் ஈடுபட்ட கிராமமக்களுக்கு குளிர்கால ஆடைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். குறிப்பாக குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் அவர் நஞ்சப்பசத்திர கிராமமக்களுக்கு தேசமும், ராணுவமும் எப்போதும் நன்றியுடன் இருக்கும். ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. தன்னலமற்ற சேவையை ராணுவம் ஒருபோதும் மறக்காது என்றார்.
மேலும் லெப்டினன்ட் ஜெனரல் அருண் நிருபர்களிடம் கூறும்போது, நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு என்ன சிகிச்சை தேவையோ அளிக்கப்படும். புதிய நிழற்குடையில் கூட்டம், காத்திருப்பது, வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வசதி உள்ளது. அங்கு இருக்கைகள், சுவர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது என்றார்.
ரஷியா- உக்ரைன் போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது.
ஊட்டி:
ரஷியா - உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 நாட்களாக தேயிலை ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குன்னூரில் நடந்த தேயிலை ஏலத்தில் 32 சதவீத தேயிலை தூள் விற்பனையாகவில்லை. ரூ.4 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷியா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவிற்கு 612 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.
இதேபோல உக்ரைன் உள்ளிட்ட காமன்வெல்த்தை சேர்ந்த 12 நாடுகள் அதிகளவில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தூளை கொள்முதல் செய்து வருகின்றன. போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் தேயிலை வர்த்தகத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷியா - உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 நாட்களாக தேயிலை ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குன்னூரில் நடந்த தேயிலை ஏலத்தில் 32 சதவீத தேயிலை தூள் விற்பனையாகவில்லை. ரூ.4 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷியா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவிற்கு 612 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.
இதேபோல உக்ரைன் உள்ளிட்ட காமன்வெல்த்தை சேர்ந்த 12 நாடுகள் அதிகளவில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தூளை கொள்முதல் செய்து வருகின்றன. போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் தேயிலை வர்த்தகத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மசினகுடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பக வனத்தையொட்டிய மசினகுடி சுற்றுப்புறக் கிராமங்களில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த 10 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், ஐந்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1500 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
உலக வன விலங்குகள் நிதியம், மாரியம்மா அறக்கட்டளை, அருளகம் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த இழப்பீட்டு தொகையை வழங்கின. மசினகுடி ஊராட்சி மன்ற உறுப்பினர் உத்தமன், பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில், ஊட்டி அரசு கலைக் கல்லூரி வன விலங்குகள் துறை பேராசிரியர் மோகனகிருஷ்ணன், கழுகு ஆராய்ச்சியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 14,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
ஊட்டி:
வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வெகுவாக விலக்கிக் கொள்ளப்பட்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரியின் முக்கிய சுற்றுலா மையமான ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 9,000 பேர் வந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இது 14,000 ஆக அதிகரித்திருந்தது.
அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சுமார் 4,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,500 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 550 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 7,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,500 பேரும் வருகை தந்திருந்தனர்.
இவர்களைத் தவிர மாவட் டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பைன் பாரஸ்ட், 10--வது மைல், ஷூட்டிங்மேடு, பைக்காரா அருவி, அவலாஞ்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதாலும், மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலைப்பணியினை விரைவில் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய மக்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8&ந் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அச்சமயத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, அப்பகுதி மக்கள் உதவி செய்தனர்.
மீட்பு பணிக்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், 2022 டிசம்பர் 8-ந் தேதி வரை ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த மாதம் முதல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் 2&வது முறையாக மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் ராஜேஸ்வர்சிங் தொடங்கி வைத்தார்.
முகாமில் அப்பகுதி மக் களுக்கு உடல்நிலை பரிசோ தனை, சாக்கரைநோய், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற் கொண்டு மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு எம்.ஆர்.சி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் கர்னல் அனில் பண்டிட் உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாலகொலா பஸ் நிலையம் மற்றும் ஊர்வளாகம் தூய்மைபடுத்தப்பட்டது.
கோத்தகிரி:
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு ஒன்றின் சார்பாக 8 நாட்களுக்கான சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாலகொலா கிராமத்தில் நடந்தது. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளால் தூய்மைப்படுத்தப்பட்டது.
மேலும் பின்பு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் வீடு வீடாகச் சென்று நெகிழியை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாலகொலா பேருந்து நிலையம் மற்றும் ஊர் வளாகம் தூய்மைபடுத்தப்பட்டது.
ஊழியர்கள் இரவில் தேயிலை தொழிற்சாலையில் தேயிலைகளை எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டிருந்தனர்
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சலீம்தின் (வயது 54). இவர் கப்படியில் சொந்தமாக தேயிலை தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தொழிற்சாலையில் தேயிலைகளை எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டி ருந்தனர். வெகுநேரமாக எந்திரம் சூடானது. இதனால் எந்திரம் திடீரென தீப்பிடித்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது. உடனே தொழிலாளர்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் இருந்து 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்தனர். அவர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






