என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்
குன்னூர் நஞ்சப்பசத்திரம் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்
ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய மக்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8&ந் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அச்சமயத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, அப்பகுதி மக்கள் உதவி செய்தனர்.
மீட்பு பணிக்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், 2022 டிசம்பர் 8-ந் தேதி வரை ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த மாதம் முதல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் 2&வது முறையாக மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் ராஜேஸ்வர்சிங் தொடங்கி வைத்தார்.
முகாமில் அப்பகுதி மக் களுக்கு உடல்நிலை பரிசோ தனை, சாக்கரைநோய், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற் கொண்டு மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு எம்.ஆர்.சி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் கர்னல் அனில் பண்டிட் உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






