என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்து
கோத்தகிரியில் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஊழியர்கள் இரவில் தேயிலை தொழிற்சாலையில் தேயிலைகளை எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டிருந்தனர்
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சலீம்தின் (வயது 54). இவர் கப்படியில் சொந்தமாக தேயிலை தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தொழிற்சாலையில் தேயிலைகளை எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டி ருந்தனர். வெகுநேரமாக எந்திரம் சூடானது. இதனால் எந்திரம் திடீரென தீப்பிடித்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது. உடனே தொழிலாளர்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் இருந்து 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்தனர். அவர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






