என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தாலிக்கு தங்கம் திட்டத்தில் நீலகிரியில் 600 பெண்களுக்கு 4.8 கிலோ தங்கம்

    திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 600 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி நிதியுதவியும், 4.8 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 600 பயனாளிகளுக்கு ரூ. 2.32 கோடி நிதியுதவியும், 4.8 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர், பெண்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர்  உரிமைத் துறையின்கீழ் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின்கீழ், குடும்பங்களில் பட்டப் படிப்பு படித்த பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம், பட்டப் படிப்பு அல்லாதோருக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியாகவும், அதனுடன் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. 

    2021-22 ம் ஆண்டில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு பயின்ற 330 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 65 லட்சமும், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற 270 பயனாளிகளுக்கு ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம்  என மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி, 4.8 கிலோ தங்கம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஊட்டி   வட்டத்தைச் சேர்ந்த 85 பட்டதாரிகளுக்கும், 36 பட்டதாரி அல்லாதோருக்கும், குன்னூர்  வட்டத்தைச் சேர்ந்த 81 பட்டதாரிகளுக்கும், 28 பட்டதாரி அல்லாதோருக்கும், கோத்தகிரி வட்டத்தைச் சேர்ந்த 49 பட்டதாரிகளுக்கும், 27 பட்டதாரி அல்லாதோருக்கும், கூடலூர்  வட்டத்தைச் சேர்ந்த 115 பட்டதாரிகளுக்கும், 179 பட்டதாரி அல்லாதோருக்கும் என மொத்தம் 600 பயனாளிகளுக்கு 4.8 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×