search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
    X
    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

    ராணுவம் சார்பில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த நஞ்சப்பசத்திரத்தில் நிழற்கூரை அமைப்பு

    நிழற்கூரையை மக்களின் பயன்பாட்டுக்கு தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் திறந்து வைக்கிறார் என்று மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    அங்கு மீட்பு பணிக்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், 2022 டிசம்பர் 8-ந் தேதி வரை மாதந்தோறும் ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவித்தார்.

    அதன்படி வெலிங்டன் ராணுவ மருத்துவமனை சார்பில் ஜனவரி மாத இறுதியில் அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.

    இந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு நிழற்கூரை அமைப்பதற்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் முடிவு செய்தது.

    இதற்காக குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய் மற்றும் தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து நிழற்கூரை அமைக்க தடையில்லா உத்தரவு வழங்கினர். அதைதொடர்ந்து, வெலிங்டன் ராணுவ குழுவினர் அளவீடு செய்து, நிழற்கூரை அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது.

    இந்த நிழற்கூரையை மக்களின் பயன்பாட்டுக்கு தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் திறந்து வைக்கிறார் என்று மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×