என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மழையால் ஊட்டியில் 3 இடங்களிலும், குந்தாவில் 1 இடத்திலும், குன்னூரில் 1 இடத்திலும் மரங்கள் விழுந்துள்ளன.
    • மாவட்டத்தில் 13 இடங்களில் சுற்றுச்சுவா்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மசினகுடி பகுதியில் ஒரு ஆடு இறந்துள்ளது.

    இதற்கு அரசின் நிவாரணத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. மழையால் ஊட்டியில் 4 வீடுகள், குன்னூரில் 14 வீடுகள், கோத்தகிரியில் 1 வீடு என மொத்தம் 19 வீடுகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு தலா ரூ. 4,100 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

    மழையால் ஊட்டியில் 3 இடங்களிலும், குந்தாவில் 1 இடத்திலும், குன்னூரில் 1 இடத்திலும் மரங்கள் விழுந்துள்ளன.

    தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உடனடியாக இந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    மழையின் காரணமாக மாவட்டத்தில் 13 இடங்களில் சுற்றுச்சுவா்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில், இந்திரா நகா் பகுதியில் மழையின் காரணமாக பகுதி வீடு சேதமடைந்த 3 குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணத் தொகையாக தலா ரூ.4,100-ஐ வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் வழங்கினாா். இதே போல மாவட்டத்தில் மழைகாரணமாக வீடு சேதமடைந்த நபா்களுக்கு நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா். மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கை எடுக்கப்பட்டு, மழை நீா் செல்லக் கூடிய தாழ்வான பகுதிகளில் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பின் குன்னூா் வட்டத்துக்கு உள்பட்ட தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்திலும், அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்காளா் பட்டியலி ல் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பாா்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வி ன்போது, குன்னூ ா் கோட்டாட்சியா் பூஷணகு மாா், குன்னூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ண மூா்த்தி, குன்னூா் வட்டா ட்சியா் சிவகுமாா், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகன குமார மங்கலம்,ஜெய்சங்கா், நகர திமுக செயலளர் ராமசாமி, நகர துணை செயலாளர் வினோத் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • நடப்பாண்டில் இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கூடலூர்

    கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் கூடலூர் உள்ளதால், வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் கூடலூர், மசினகுடி, தேவர்சோலை உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இருப்பினும் போதைப்பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரகசியம் காக்கப்படும் இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறியதாவது

    கூடலூர் உட்கோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக நடப்பாண்டில் இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 50,608 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கஞ்சா வைத்திருந்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 77 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    6987 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா போன்ற போதைபொருள் கடத்தல், விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இதன் பேரில் தகவல் தெரிவிப்பவரின் பெயர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது
    • கரடி தோட்டக்கலை அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தது.

    குன்னூர்,

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகம் அருகே வனப்பகுதியும் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, நேற்று முன்தினம் இரவு தோட்டக்கலை அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அலுவலக முன்புறம் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த எண்ணெய்யை குடித்தது. அங்கிருந்த கணினியை சேதப்படுத்தியது.

    பின்னர் மாடி படியில் ஏறி சென்ற கரடி, அங்கு பணியாளர்கள் வைத்திருந்த சர்க்கரை, தேயிலைத்தூள் போன்றவற்றை தின்றும், கொட்டியும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து கரடி வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது.
    • கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து மடித்தோரை பகுதி வரையிலான சாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. இந்த சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது. இந்த சாலையின் இரு புறங்களிலும் எச்சரிக்கை கோடுகள் மற்றும் சாலை நடுவில் ஒளிரும் விளக்குகள் தற்போது வரை போட படாமலே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் சாலை தெரியாமல் சாலை ஓரத்தில் இருக்கும் மரங்களிலும், பள்ளங்களிலும் வானங்களை மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

    எனவே நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஒளிரும் விளக்குகளையும், எச்சரிக்கை கோடுகளையும் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கவுசல்யா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • குன்னூர் சோமர் சேட் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்த போது தனது பையை சோதனை செய்தார்.

    ஊட்டி,

    நாமக்கல்லை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல்லுக்கு வந்தார். பின்னர் சம்பவத்த ன்று குன்னூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் சென்றார். அப்போது குன்னூர் சோமர் சேட் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்த போது தனது பையை சோதனை செய்தார். அப்போது அதில் வைத்திருந்த மடிக்கணினி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் பஸ்சில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. யாரோ மர்மநபர் அவரது லேப்டாப்பை திருடி சென்றது தெரியவந்தது.இதையடுத்து கவுசல்யா சம்பவம் குறித்து குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    • மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலுமே காலை முதல் மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழைக்கு குன்னுாரில் கிளண்டேல், உலிக்கல், ஜிம்கானா பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் குன்னுார்-மேட்டுப்பா–ளையம் சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் ஆர்செடின் சாலையில் கிளன்டேல் தேயிலை தொழிற்சாலை அருகே மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    இதேபோல் காந்திபுரம், கக்காச்சி மேல் பாரதி நகர், கேத்தி, எடப்பள்ளி, கன்னிமாரியம்மன் கோவில் பகுதிகளில், 11 வீடுகளில் வீட்டின் ஒரு பகுதி மழைக்கு இடிந்து விழுந்தது.இந்த பகுதிகளை கூடுதல் கலெக்டர் பூஷன் குமார் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா, 4,100 ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.

    குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. இேதபோல் கோத்தகிரி மிளிதேன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. காக்காசோலை கிராமத்தில் பார்வதி என்பவரது வீட்டிற்கு பின்புறம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கொடநாடு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வீட்டிற்கு அருகே இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் மழைக்கு ஊட்டி, குந்தா பகுதிகளில் 5 வீடுகள் சேதமானது.

    ஊட்டி கோடப்பம்மந்து கால்வாயை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் இருந்து ரெயில் நிலையம் அருகே உள்ள சாலைக்கு கழிவுநீர் வராமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தர விட்டார்.ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஊட்டி சுற்று வட்டாரத்தில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. வார இறுதி நாளான நேற்று, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் கணிசமாக வந்தனர். குளிர் மற்றும் சாரல் மழையில் குடைபிடித்தவாறு பயணியர் சுற்றுலா தலங்களில் வலம் வந்ததை பார்க்க முடிந்தது.

    தொடர் மழையால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    • நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.

    ஊட்டி,

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் ஊட்டி ஒய்.டபிள்யு.சி.ஏ., ஆனந்தகிரி கூட்ட அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதகத்துல்லா, மோகன்குமார், பேரூர் செயலாளர்கள் பிரகாஷ், நடராஜ், சதீஷ்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.*

    குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க பாக நிலை முகவர்கள் காணொளி கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், நெல்லைக்க ண்ணன், பீமன், லாரன்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம். ராஜு, பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொடநாட்டில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
    • கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு.

    நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊட்டியில் 9 செ.மீ மழையும், கொடநாட்டில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஊட்டி-91, கொடநாடு-81, கிளைன்மார்கன்-74, கோத்தகிரி-71, உலிக்கல்-62, குன்னூர் புறநகர்-60, குன்னூர்-57, எடப்பள்ளி-55, பர்லியார்-53, கூடலூர்-45, அப்பர் கூடலூர்-44, தேவலா-42.

    மேட்டுப்பாளையம்-64, பெரியநாயக்கன் பாளையம்-59, பில்லூர் டேம்-54, கோவை தெற்கு-54, வால்பாறை பி.ஏ.பி.-55, சின்னக்கல்லார்-56, வால்பாறை தாலுகா-53, பொள்ளாச்சி-56, சூலூர்-45, தொண்டாமுத்தூர்-40, மதுக்கரை தாலுகா-34,

    • பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன.
    • படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், கூடலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஊட்டி நகரில் மழை பெய்ததால், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்

    தொடர் மழையால் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவியது. குளிரை போக்க சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படியும் சுற்றுலா தலங்களை கொட்டும் மழையிலும் கண்டு ரசித்தனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. பலத்த மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    படகுகள் அனைத்தும் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன தொடர் மழை காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி முடங்கியது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால், கடும் பனிமூட்டம் நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடர்ந்த வனப்பகுதியையொட்டி மலைப்பாதை உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றனர்.

    • முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
    • 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது.

    ஊட்டி,

    டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது. நீலகிரியில் கேக் மிக்ஸிங் செரிமனி என்பது வீடுகளில் சிறிய அளிவில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த கொண்டாட்டம் 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது. அனைத்து ஓட்டல்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரீச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, பாதாம், பிஸ்தா, அரைக்கப்பட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை கொண்டு கலவை தயாரிக்கின்றனர். இந்த கலவை பதப்படுத்த மர பீப்பாயில் ஒரு மாத காலம் வைக்கப்படும். பின்னர், மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விழா ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊட்டி நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செப் ஆந்தோ னி,வெங்கட்ராவ்,செல்வம் ஓட்டல் மேலாளர் முரளிகுமார் உள்ளிட்ட ஓட்டல் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

     

    • ரூ.2.10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • பணிக்கொடை மற்றும் இதர பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஊட்டி,

    தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சாா்பில் டேன்டீ சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அமைச்சா் ராமசந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினர்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் அமைச்சா் ராமசந்திரன் கூறும்போது,

    2016-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த தொழிலாளா்கள், அனைத்து தொகையும் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற 677 தொழிலாளா்களுக்கு பணிக்கொடை மற்றும் இதர பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் அரசு நிலத்தில் தாமாக முன்வந்து வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டாவும், வீடுகட்ட மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மூன்றாவது வாய்ப்பாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்களே வீடுகட்டிக் கொள்ள விரும்புவோருக்கு இதே பகுதியில் வீட்டு மனைப்பட்டா இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாா்.

    எம்.பி. ஆ.ராசா கூறும்போது,

    பயனாளிகளின் பங்களிப்புடன் 496 வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப ரூ.5 லட்சம் செலுத்துபவா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், தற்போது பணம் செலுத்த முடியாது என இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றாா்.

    கூட்டத்தில் வனத் துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சையத் முஜிம்மில் அப்பாஸ், வனத்துறை சிறப்பு செயலாளா் ராஜ்குமாா், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

    • அணை நீர் மட்டம் 204 அடியாக உயர்ந்தது.
    • 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 13 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175 மெகாவாட், பரளி-180 மெகாவாட், பில்லுார்-100 மெகாவாட், அவலாஞ்சி-40 மெகாவாட், காட்டுகுப்பை-30 மெகாவாட், சிங்காரா-150 மெகாவாட், பைக்காரா- 59.2 மெகாவாட், பைக்காராமைக்ரோ- 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ-0.70 மெகாவாட், மாயார்-36 மெகாவாட், மரவகண்டி-0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நீலகிரி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 'பீக்அவர்ஸ்' எனப்படும் மின்தேவை அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் உபயோகப்படுத்தப்ப டுவதுடன் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின் உற்பத்தி நீலகிரி மின்நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக அணைக்கட்டுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இடையில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமரால்டு உள்பட பெரும்பாலான அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானி அணையின் மொத்த கொள்ளளவு 210 அடிகளாகும்.

    தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் நீரின் இருப்பு 204 அடிகளாக உயர்ந்துள்ளது. இதை தொடந்து அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

    ×