என் மலர்
நீங்கள் தேடியது "ஒளிரும் விளக்குகள் அமைக்க கோரிக்கை"
- 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது.
- கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து மடித்தோரை பகுதி வரையிலான சாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளது. இந்த சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக புதிதாக போடப்பட்டது. இந்த சாலையின் இரு புறங்களிலும் எச்சரிக்கை கோடுகள் மற்றும் சாலை நடுவில் ஒளிரும் விளக்குகள் தற்போது வரை போட படாமலே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் சாலை தெரியாமல் சாலை ஓரத்தில் இருக்கும் மரங்களிலும், பள்ளங்களிலும் வானங்களை மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஒளிரும் விளக்குகளையும், எச்சரிக்கை கோடுகளையும் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






