என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் மாமியாருக்கு தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் சத்திரத்தடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி மீனாட்சி (40). இவரது மருமகன் செந்தில். (26). செந்திலின் அண்ணன் முருகானந்தம் விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை பார்ப்பதற்காக செந்தில் தனது மாமனார் பசுபதியின் மோட்டார் சைக்கிளை யாரிடமும் சொல்லாமல் தனது நண்பருடன் திருவாரூர் சென்று, தனது அண்ணனை பார்த்து விட்டு திரும்ப கொண்டு வந்து வைத்துள்ளார்.அப்போது செந்திலின் மாமியார் மீனாட்சி, செந்தில் நண்பரிடம் ஏன் சொல்லாமல் எடுத்து சென்றீர்கள், சொல்லி விட்டு எடுத்து சென்றிருக்கலாமே என கேட்டுள்ளார்.

    இதைகேட்ட செந்தில் தனது மாமியார் மீனாட்சியை தரக்குறைவாக பேசி தலைமுடியை பிடித்து இழுத்து காலால் உதைத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மீனாட்சி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    மயிலாடுதுறையில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற தாய் உடல் கருகியது.
    மயிலாடுதுறை;

    மயிலாடுதுறையில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற தாய் உடல் கருகியது.

    மயிலாடுதுறை கூரைநாடு அண்ணா வீதியை சேர்ந்தவர் ராஜூலு. திருவிழாவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கீர்த்திகா (16). மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவரது தாய் மகாலட்சுமி மாணவியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கீர்த்திகா தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற தாய் மகாலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் விசாரணை நடத்தி வருகிறார்.
    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதலி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள காளி அபிராமி கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் சர்மா. இவரது மகன் கார்த்தி (22). டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் காளி அபிராமி கோவில் பகுதியை சேர்ந்த சின்னக்குஞ்சு மகள் வினோதினியை (20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் கார்த்தி மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தார். நேற்று அவர் தனது உடலில் மண் ணெணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இந்த தகவலை அறிந்ததும் காதலி வினோதினி அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் அப்புராஜபுரம் ராஜேந்திர வாய்கால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

    இவரது மகள் தீபிகா (19). இவர் பூம்புகாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை இறந்து விட்டதால் தாய் சுமதியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தீபிகா செல்போன் பேசிக் கொண்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்த போது தீபிகாவை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது பெல் அடித்தது. ஆனால் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள வாய்க்காலில் தீபிகா செல் கிடந்தது. இதனை அந்த வழியாக வந்த உமையாள்புரத்தை சேர்ந்த ஒருவர் எடுத்து பேசி உள்ளார். பின்னர் அதனை தீபிகாவின் தாய் சுமதியிடம் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து சுமதி மற்றும் உறவினர்கள் செல்போன் கிடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு சற்று தூரத்தில் தீபிகா வாய்க்காலில் தலை குப்புற பிணமாக கிடந்தார்.

    அருகில் மண்வெட்டியின் கைப்பிடி கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. மேலும் கீர்திகாவின் ஆடைகளும் கிழிந்து இருந்தது. அவரை யாரோ மண் வெட்டி கைப்பிடியால் அடித்து கொன்றது தெரிய வந்தது.இது குறித்து பொறையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கீர்த்திகா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.

    கீர்த்திகாவிடம் இரவு பேசிய நபர் யார்? என்பது குறித்து அவரது செல்போனில் பதிவான எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை.

    அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறை முகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சீத்தா தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 20 நாட்களுக்கு முன் அகோர மூர்த்தி சொந்த ஊருக்கு வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்தது.

    அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 5¼ பவுன் நகையை காணவில்லை. அவரை கொள்ளை கும்பல் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    சீத்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து சீத்தாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் வந்த பின்னர் தான் வீட்டில் வேறு பொருட்களை கொள்ளை போனதா? என்பது தெரிய வரும். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி ராமாயி என்கிற பானுமதி (வயது70). இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பானுமதி அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

    இதில் பானுமதி சத்தம்கேட்டு பொதுமக்கள் அந்த நபரை துரத்தினர். அப்போது ரோட்டின் குறுக்கே வந்த சுப்பிரமணியன் (53) என்பவரை அந்த நபர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அந்த நபர் காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி வடக்குதெரு, கலியபெருமாள் மகன் செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சுப்பிரமணியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றி போலீசார் செந்தல்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    தலைஞாயிறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைஞாயிறு:

    தலைஞாயிறு அருகே அருதவம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது60). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மேல கொருக்கையை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே கோவில் கலசம் திருடிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், மருதூர் வடக்கு அன்னப்பன்காடு பகுதியில் முனீஸ்வரர், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் விமானத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலசம் மட்டும் திருட்டு போய்விட்டது. இந்த திருட்டு தொடர்பாக போலீசில் புகார் கொடுப்பது பற்றி கோவிலை நிர்வாகம் செய்து வரும் நாராயணசாமி, முக்கியஸ்தர்கள், பஞ்சாயத்தார்கள் ஆலோசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மருதூர் வடக்கு ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், நாராயணசாமியிடம் திருட்டு போன கலசம் பற்றி மந்திரவாதி விஜயகுமாரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று கூறினாராம். இதையடுத்து அவர் கரியாப்பட்டினம் போலீசில் இது பற்றி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கோவில் அருகே உள்ள மந்திரவாதி விஜயகுமார் (33) என்பவர் வீட்டிற்கு சென்று சோதனையிட்டபோது கோவிலில் திருடப்பட்ட கலசம் தனித்தனியே பிரித்து மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றி விஜயகுமாரையும் கைது செய்தனர்.

    வேதாரண்யம் அருகே தச்சு தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரெகுநாதன் மகன் உதயகுமார் (வயது26). திருமணம் ஆகாதவர், தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுள்ளார். மாலை ரெகுநாதனுக்கு செல்போனில் ஊருக்கு வந்து விட்டேன் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார்.

    ஆனால் அன்று வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லையாம். பல இடங்களில் தேடிப்பார்த்தும், கிடைக்காததால் கரியாப்பட்டினம் போலீசில் ரெகுநாதன் புகார் செய்துள்ளார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை தேடி வருகிறார்.

    சீர்காழி பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கீழமூவர்க் கரை மற்றும் அதன் சுற்று வட்டார மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. சூறாவளிக்காற்றில் சிக்கி 20 படகுகள் சேதமடைந்தன. மேலும் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

    திருவெண்காடு:

    சீர்காழி பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கீழமூவர்க் கரை மற்றும் அதன் சுற்று வட்டார மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. சூறாவளிக்காற்றில் சிக்கி 20 படகுகள் சேதமடைந்தன. மேலும் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

    நாகை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் கீழமூவர்க்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பி கடல் சீற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மழை பெய்வதற்கு முன் சீர்காழி அருகே உள்ள கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த அஞ்சப்பன் மகன் ராமராஜ்(வயது27) (மீனவர்) என்பவர் தனது புதிய பைபர் படகை கீழமூவர்க்கரை கடற்கரையில் நிறுத்தி பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ராமராஜின் புதிய படகு உள்பட அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதம் அடைந்தன.

    மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த ராமராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சின்னதம்பி மகன் குணசேகரன்(48), தர்மராஜ் மகன் பூவரசன்(19), ஆகியோர் படகுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார். சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 10 கூரை வீடுகம் சேதம் அடைந்தன.

    மயிலாடுதுறையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    கர்நாடகவை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு, ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன் குமார், பாராளுமன்ற அமைப்பாளர் கதிர்வளவன், மாவட்ட செயலாளர் தேவா, மயிலாடுதுறை நகர செயலாளர் பிரபா, சீர்காழி நகர செயலாளர் தம்பி ராஜதுரை, மாவட்ட அமைப்பாளர் சகுருதீன், இஸ்லாமிய ஜனநாயக மாநில துணை செயலாளர் முஜிபூர் ரகுமான் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, சேதுசாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வி (45). இவர் கடந்த 9-ந்தேதி தனது மகள் சித்ராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அகஸ்தியன்பள்ளி மாரியப்பன் மனைவி வனிதா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்வி மீது மோதியதில் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார்.
    அவருக்கு உள்ளுரிலேயே நாட்டு வைத்தியம் செய்துள்ளனர். இதில் செல்வி உடல்நிலை மோசமானதால் தஞ்சையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்பினர்.

    அவரை வேதாரண்யத்துக்கு அழைத்து வரும்போது மன்னார்குடி அருகே வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×